/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
டீ விற்றவர் முதல் பேப்பர் பாய் வரை.. சாதனை தலைவர்களின் முதல் வேலை..!
/
டீ விற்றவர் முதல் பேப்பர் பாய் வரை.. சாதனை தலைவர்களின் முதல் வேலை..!
டீ விற்றவர் முதல் பேப்பர் பாய் வரை.. சாதனை தலைவர்களின் முதல் வேலை..!
டீ விற்றவர் முதல் பேப்பர் பாய் வரை.. சாதனை தலைவர்களின் முதல் வேலை..!
UPDATED : அக் 03, 2023 03:17 PM
ADDED : அக் 03, 2023 01:38 PM

தலைவர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள் என்ற பழமொழி உண்டு. தலைமை பண்பு என்பது திறமையால் மட்டும் கிடைத்துவிடாது. தான் மட்டுமல்லாது, தன்னை சார்ந்திருப்போரை சாதிக்க உற்சாகப்படுத்தி வழிகாட்டுவோரிடம் தலைமை பண்பு இயல்பாக வந்துவிடும். தலைவர்கள் எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதோடு, எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும்.
இன்று பல நாடுகள், நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உயர்ந்துள்ளவர்களின்
முதல் வேலை என்பது மிக சாதாரணமாக தான் இருந்துள்ளது. தற்போது நீங்கள் எந்த
நிலையில் இருந்தாலும், நாளை நீங்களும் தலைவராக உயர முடியும் என்பதற்கு
இவர்களே உதாரணம் ஆவார்கள்.
1. பிரதமர் மோடி :
1950ம் ஆண்டு பிறந்த நம் பாரத பிரதமர் மோடி, தனது சிறுவயதில் குஜராத் மாநிலம் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றுள்ளார். டில்லி திறந்த நிலை பல்கலையில், இளங்கலை பி.ஏ.,அரசியல் அறிவியல் முடித்தார். 1983ல்குஜராத் பல்கலையில், அரசியல் அறிவியலில் எம்.ஏ பட்டம் பெற்ற மோடி, ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பில் பணியாற்றினார். 1987ல் பா.ஜ.,வில் சேர்ந்தார். 2001ல் குஜராத் முதல்வராக தேர்வானார். 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.
2. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி :
1978ம் ஆண்டு உக்ரைனில் யூத குடும்பத்தில் பிறந்த ஜெலன்ஸ்கி, அங்குள்ள கிவ் நேஷனல் எகானமிக் பல்கலையில் சட்டப்படிப்பு முடித்தார். அரசியலுக்கு நுழைந்து அதிபராகும் வரை, நடிகராகவும், காமெடியனாகவும் வலம் வந்தார்.
3. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ :
1971ம் ஆண்டு பிறந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,பட்டப்படிப்புக்கு பின்னர் நைட்கிளப் பவுன்சர், ஸ்னோபோர்டு பயிற்சியாளர், ஆசிரியர், பாக்ஸர் என பல முகங்களை கொண்டவர். 2007ம் ஆண்டு வெளியான 'தி கிரேட் வார்' என்ற படத்தில் ட்ரூடோ நடித்துள்ளார்.
![]() |
4. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் :
அமெரிக்காவின் 46வது அதிபரான ஜோ பைடன்,1942ம் ஆண்டு பென்சில்வேனியாவில் பிறந்தவர். சட்டம் முடித்த பைடன், 29 வயதில் செனட் சபைக்கு தேர்வானார். முன்னதாக அவர், பராமரிப்பு பணியாளராக இருந்துள்ளார்.
5. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் :
ரஷ்ய அதிபர் புடின், அரசியலுக்கு வரும் முன்னர், கே.ஜி.பி பன்னாட்டு உளவு அமைப்பில் உளவாளியாக 16 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 1991ல் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழு நேர அரசியல் பயணத்தை துவங்கினார்.
6. பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் -
போரிஸ் ஜான்சன், 1987ல் தி டைம்ஸ் இதழில் பத்திரிகையாளராக பணியாற்றியவர். பின்னர் டெய்லி டெலிகிராப் இதழில் அரசியல் கட்டுரையாளராகவும், 1999 முதல் 2005ம் ஆண்டு வரை தி
ஸ்பெக்டேட்டர் வார இதழில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.
![]() |
7.அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் :
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசியலுக்கு வருவதற்கு முன் தந்தை வழியில் ரியல் எஸ்டேட், ஹோட்டல் என தொழிலதிபராக வலம் வந்தவர். தனது சுயசரிதையான 'ஆர்ட் அப் தி டீல்' புத்தகத்தில், தனது சகோதரருடன் இணைந்து ஆரம்ப கட்டத்தில்,சோடா பாட்டில்களை சேகரித்து, விற்று முதல் வருமானத்தை ஈட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
8. எலான் மஸ்க் :
உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க், வான்கூவரில் உள்ள மர அறுவை மில்லில் பாய்லரை சுத்தம் செய்யும் பணியாளராக பணியாற்றி உள்ளார். ஒரு மணி நேரத்திற்கு 18 டாலர் தனது முதல் வருமானமாக பெற்றுள்ளார்.
9. ஜெஃப் பெஜோஸ் :
அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெஃப் பெஜோஸ், தனது பதின்ம வயதில் மெக்டொனால்டு உணவகத்தில் சமையல் பணியாளராக பணியாற்றியவர். ஒரு மணி நேரத்திற்கு 3 டாலருக்கு கீழ் வருமானமாக கிடைத்துள்ளது. பின்னர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், சர்வதேச வர்த்தக தொடக்க நிறுவனமான ஃபிட்டலில் சேர்ந்தார்.
![]() |
10. வாரன் பப்பெட் :
அமெரிக்க பங்குச்சந்தையின் பிதாமகன் என்றழைக்கபடும் வாரன் பப்பெட், தனது 13 வயதில், நாளிதழ் வினியோகிப்பாளராக முதல் வேலை செய்துள்ளார். பின்னர், முதலீட்டு விற்பனையாளர், பங்குச்சந்தை நிபுணர், பெர்க்ஷையர் ஹாத்வே சி.இ.ஓ என படிப்படியாக முன்னேறியவர். தற்போது 117 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு கொண்ட பப்பெட், உலகின் 7வது மிகப்பெரிய பணக்காரராக விளங்குகிறார்.