/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
'எங்க காலத்துல எல்லாம் மீட்டர் காஜ்-ல போவோம்..!'; மீட்டர் காஜ் ரயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
/
'எங்க காலத்துல எல்லாம் மீட்டர் காஜ்-ல போவோம்..!'; மீட்டர் காஜ் ரயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
'எங்க காலத்துல எல்லாம் மீட்டர் காஜ்-ல போவோம்..!'; மீட்டர் காஜ் ரயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
'எங்க காலத்துல எல்லாம் மீட்டர் காஜ்-ல போவோம்..!'; மீட்டர் காஜ் ரயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
UPDATED : ஜன 16, 2023 11:40 AM
ADDED : ஜன 16, 2023 10:52 AM

உலகின் மிகப்பெரிய ரயில்வே துறைகளில் 4வது இடம் பிடிப்பது இந்திய ரயில்வே துறை. 2022 ஆம் ஆண்டுவரை இந்தியா முழுக்க 13.8 லட்சம் பணியாளர்கள் இந்திய ரயில்வேயில் பணியாற்றி வருகின்றனர். இதன்மூலம் உலகில் அதிக வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் இந்திய ரயில்வே 14-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய ரயில்வே முதன்முதலில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் மதராஸ் மாநிலத்தில் 1836 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
ஆர்தர் காட்டன் என்கிற வெள்ளையரின் உத்தரவின்பேரில் சென்னை சென்குன்றம் முதல் சிந்தாதிரிப்பேட்டைவரை இந்தியாவின் முதல் ரயில் தடம் அமைக்கப்பட்டது. அதில் அப்போது கிரானைட் கற்கள் எடுத்துச் செல்ல ரயில்கள் விடப்பட்டன. இன்னும் சில ஆண்டுகளில் இந்திய ரயில்வே அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில் இந்திய ரயில்வே தனது அதிவேகப் போக்குவரத்து சேவை மூலம் ஆண்டுதோறும் அதிக வருவாயை குவித்து வருகிறது. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் இன்று உள்ளதுபோல இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் இல்லை.
![]() |
குதிரை வண்டியைத் தவிர சாலையில் வேகமாகச் செல்ல வேறு எந்த வசதியும் இல்லாத நிலையில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைவாகச் செல்ல ரயில்களே உதவின. கரடு முரடான காட்டுப் பகுதிகளிலும், உயரமான மலைப் பிரதேசங்களிலும் கூட ரயில்வே ட்ராக் அமைக்கும் பணியை செய்ய இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் பணியாளர்களை நியமித்தனர்.
ரயிலின் மொத்த எடையைத் தாங்குவதில் உலோக டிராக் முக்கியப் பங்காற்றுகிறது. கனமான இரும்பு கொண்டு உருவாக்கப்படும் இந்த டிராக்குகள் கச்சிதமாகப் பொருத்தப்பட்டால்தான் ரயில் அதில் சுலபமாகப் பயணிக்க முடியும். இரு தண்டவாளங்களுக்கு இடையே உள்ள நீளம் ஆங்கிலத்தில் 'காஜ்' (gauge) எனப்படுகிறது. சிறிய மற்றும் பெரிய பெட்டிக்கள் கொண்ட ரயில்கள் பயணிக்க காஜ் நீளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரயில்வே காஜ் குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?
ரயில்வே காஜ் அதன் நீளத்தைப் பொருத்து மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை- மீட்டர் காஜ், ஸ்டாண்டர்டு காஜ், பிராட் காஜ். சிக்கலான மலைப் பிரதேசங்களில் ரயில்வே டிராக் அமைக்கப்படும்போது சிறிய பெட்டிகள் கொண்ட ரயில்கள் செல்ல ஏற்றவாறே அமைக்கப்படும். அதிக எடை கொண்ட பெரிய பெட்டிகள் கொண்ட ரயில்கள் அப்பகுதியில் சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சிறிய பெட்டி ரயில் செல்ல ஏதுவாக உருவாக்கப்பட்ட காஜ் தான் மீட்டர் காஜ். மீட்டர் காஜ் டிராக்கில் இரு தண்டவாளங்களுக்கும் இடையே உள்ள நீளம் மூன்றரை அடி மட்டுமே.
![]() |
சமவெளிகளில் அதிக எடை கொண்ட பெரிய ரயில்கள் செல்ல அமைக்கப்படுவதுதான் பிராட் காஜ். பிராட் காஜ் டிராக்கில் இரு தண்டவாளங்களுக்கும் இடையே உள்ள நீளம் ஐந்தடி ஆறு அங்குலம். மீட்டர் காஜ், பிராட் காஜ் தண்டவாளங்களுக்கு இடையே மிதமான இடைவெளியில் அமைக்கப்படும் தண்டவாளங்களுக்குப் பெயர் ஸ்டாண்டர்ட் காஜ். இதன் நீளம் நான்கு அடி எட்டரை அங்குலம். இதில் மிதமான எடை கொண்ட ரயில் பெட்டிகள் பயணிக்கலாம். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக மீட்டர் காஜ் ரயில்வே டிராக்குகள் தற்போது வழக்கொழிந்து வருகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது பெரிய பெட்டி கொண்ட ரயில்கள் பிராட் காஜ் டிராக்கில் பயணிக்கத் துவங்கிவிட்டன.
பூமர் தலைமுறையினர் 1960-களில் மீட்டர் காஜ் பெட்டிகளில் அதிகம் பயணித்திருப்பர். தற்போது அவர்கள் 70 வயதைக் கடந்த முதியவர்கள் ஆகிவிட்டனர். இன்று மெட்ரோவில் செல்லும் 2கே கிட்ஸ் பூமர்களிடம் மீட்டர் காஜ் குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டால் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் இதே கதையை சொல்லலாம்..!



