/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
பொதுவான 9 வகையான போபியாக்கள் பற்றி அறிவோமா..?
/
பொதுவான 9 வகையான போபியாக்கள் பற்றி அறிவோமா..?
UPDATED : ஜூலை 02, 2023 08:39 PM
ADDED : ஜூலை 02, 2023 08:25 PM

பொதுவாக வெளியில் தைரியமான நபராக காட்டி கொள்ளும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். அதுவே அதீத அச்ச உணர்வாக இருப்பதை ஆங்கிலத்தில் போபியா என்று குறிக்கின்றனர். நம்மில் பலருக்கும் நம்மை அறியாமல் பல விஷயங்களில் போபியா இருக்கும். பொதுவாக காணப்படும் 9 வகையான போபியா குறித்து தெரிந்து கொள்வோம்.
1.ஏரோ போபியா (Aerophobia) :
பொதுவாக விமானத்தில் பறப்பதற்கு பயம் கொள்வதற்கு ஏரோ போபியா என்றழைக்கப்படுகிறது. உயரமான இடத்திற்கு செல்ல பயம் கொள்வதற்கும் இதற்கும் தொடர்புள்ளது.
2. சைனோபோபியா (Cynophobia) :
எந்தவொரு நாயை கண்டாலும், அது குட்டி நாயாக இருந்தாலும் கூட, பயத்தில் நடுங்கி, ஓட்டம் பிடிப்பதற்கு சைனோபோபியா என்று குறிப்பிடுவர். சிறு வயதில் ஏற்பட்ட சில அதிர்ச்சிகரமான பாதிப்பு காரணமாக இது போன்று நிகழலாம்
![]() |
3. கிளாஸ்ட்ரோஃபோபியா ( Claustrophobia ) :
ஒரு குறுகிய இடைவெளி அல்லது சிறிய பெட்டி போன்ற அறைக்குள் செல்ல பயம் கொள்வதை கிளாஸ்ட்ரோபோபியா என்று அழைக்கின்றனர். கிளாஸ்ட்ரோபோபியாவால் பாதிக்கப்பட்டோர் லிப்ட், சிறிய அறை அல்லது சுரங்க பாதைக்குள் செல்லும் போது படபடப்பாக உணர்வார்கள். மூச்சுவிட சிரமப்படுவது போன்று உணரக்கூடும்.
4. ஹீமோபோபியா ( Hemophobia) :
ரத்தத்தின் மீது பயம் கொள்வதை ஹீமோபோபியா என்றழைப்பர். விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டால் தலைச்சுற்றல், மயக்கம், வியர்த்து கொட்டும். மேலும் இந்த ஹீமோபோபியா ஊசி போடுவது, ரத்தம் எடுப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்.
![]() |
5. நெக்டோபோபியா ( Nyctophobia) :
இருட்டின் மீது பயம் கொள்வதை நெக்டோபோபியா என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் சிறுவயதில் ஏற்பட்ட பயம், வளர்ந்த பின்னும் தொடரும். சிறுவயதில் இருட்டான இடங்களில் பேய், பிசாசு நடமாடுவதாக கற்பனை கதைகள் கேட்டதால் ஏற்படும் பயம், பின்னாட்களில் பேய் படங்கள் பார்ப்பது வரை பாதிப்பு தொடரும்.
6. அக்ரோபோபியா ( Acrophobia) :
உயரமான கட்டடங்கள், பால்கனி, மாடிகள், விமானம் போன்றவற்றில் செல்ல ஏற்படும் பயத்தை அக்ரோபோபியா என்றழைக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டோருக்கு சாதாரண உயரம் என்றாலே ஒருமாதிரி ஆகிவிடுவர்.
7. ஒபிடியோபோபியா ( Ophidiophobia) :
பாம்புகள், பல்லிகளை கண்டால் பயந்து நடுங்குவதை ஒபிடியோபோபியா என்று அழைக்கின்றனர். பாம்பை கண்டால் படை நடுங்கும் என்பது பழமொழி. இதனால் பாதிக்கப்பட்டோர் பாம்பை கண்டால் தொடை நடுங்குவர்.
![]() |
8. நெக்ரோபோபியா ( Necrophobia) :
மரணம் தொடர்பாக பயம் கொள்வதை நெக்ரோபோபியா என்று அழைக்கின்றனர். உதாரணமாக, இறந்தவர்களின் வீட்டுக்கு செல்ல பயம் கொள்ளுதல், மருத்துவமனை, சவப்பெட்டி அல்லது இறந்து போனவர் அல்லது விலங்குகளை எண்ணி பயம் கொள்வர். இதனால் பாதிக்கப்பட்டோர், டிவியில்இறந்தவர் தொடர்பான செய்திகளை பார்ப்பதற்கு கூட பயம் கொள்வார்களாம்.
9. ஈனோகுளோபோபியா (Enochlophobia ) :
கூட்டத்தை கண்டாலே தேவையற்ற மன அழுத்தம், பீதி ஏற்படுவதை ஈனோகுளோபோபியா என்று அழைக்கின்றனர்.
![]() |





