UPDATED : ஜூன் 30, 2023 04:36 PM
ADDED : ஜூன் 30, 2023 04:35 PM

யூக்லிப்டஸ் மர இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் நீலகிரி தைலம் எனப்படுகிறது. மருத்துவ குணங்கள் பல வாய்ந்த மூலிகை எண்ணெய் இது. இதன் பலன்களைத் தெரிந்துகொள்வோமா?
யூகலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும் அழகு பராமரிப்புக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் இதனை தேய்த்து ஊறவித்து குளித்தால் சருமம் பொலிவுறும்.
சரும கொப்புளங்கள், சிறு காயங்கள், சிராய்ப்புகளை குணமாக்குவதுடன் தலைவலிக்கும் மருந்தாக இருக்கிறது.
சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை உள்ளங்கையில் விட்டு முகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு சட்டென விலகும். சளியையும், தும்மலையும் தூரவிரட்டும்.
மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் இருக்கிறது. வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
![]() |
ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு மருந்தாக இருக்கிறது.
கொதிக்கும் நீரில் சிறிது நீலகிரி தைலத்தைப் போட்டு ஆவி பிடிக்கலாம். இதனால் மூக்கடைப்பு, சைனஸ் பிரச்னை நீங்கும்.
உடல் வலி, தசை வலி உள்ள இடங்களில் நீலகிரி தைலத்தைத் தடவி, மசாஜ் செய்வதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
காய்ச்சலின்போது நம் உடலில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். இந்த தருணத்தில், யூக்லிப்டஸ் தைலத்தை உடல் முழுவதும் தேய்ப்பதால் உடல் வெப்பம் தணிந்து காய்ச்சல் குணமடையும்.
தலைவலி, சளி, இருமல், மூட்டு வலி, உடல் வலி போன்ற அனைத்து பாதிப்புக்கும் நீலகிரி தைலத்தை பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

