sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறிந்துகொள்வோம்/சமைக்கும்போது தீக்காயம் பட்டால் என்ன செய்வது?

சமைக்கும்போது தீக்காயம் பட்டால் என்ன செய்வது?

சமைக்கும்போது தீக்காயம் பட்டால் என்ன செய்வது?


UPDATED : ஜூன் 22, 2022 01:31 PM

ADDED : ஜூன் 22, 2022 01:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2022 01:31 PM ADDED : ஜூன் 22, 2022 01:24 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமையல் செய்யும் போது பலருக்கும் உடலில் ஆங்காங்கே காய்ந்த எண்ணெய் தெறிப்பது, சூடான கடாய் மற்றும் குக்கரின் மேல் கை படுவது போன்றவை வாடிக்கையான ஒன்று. 'ஆ.. வலிக்கிறதே.. எரிகிறதே... எனக் கூறிக்கொண்டே ஐஸ்கட்டி தேய்ப்பது, பேனா இன்க் தடவுவது போன்ற முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்வர். ஆனால் இது தவறான வழிமுறைகள் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.

பொதுவாக முகம், கை, கைவிரல்கள் உள்ளிட்ட பகுதிகளில் தான் தீக்காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் தீக்காயம் பட்ட கையை தண்ணீரில் நனைக்க பலரும் தயங்குவர். தீக்காயம் பட்ட பகுதியை தண்ணீரில் நனைக்கும் போது, கொப்புளம் ஏற்படக்கூடும் என்ற தவறான எண்ணமே பலரிடமும் உள்ளது.

Image 962989
தீக்காயம் ஏற்பட்ட இடத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவாக நனைக்கிறோமோ, அதே அளவுக்கு விரைவாக காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் தணிந்து, காயத்தின் தீவிரமும் குறையும். மேலும் கொப்புளங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும். தீக்காயம் பட்ட இடம் முகம் என்றால், உடனே முகத்தைத் தண்ணீரில் கழுவ வேண்டும், கை என்றால், அருகிலுள்ள பைப் தண்ணீரில் கையை நனைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் சூடு பட்ட இடத்தை அடிக்கடி நனைக்க வேண்டும். காயம்பட்ட இடத்தை குறைந்தபட்சமாக 15 நிமிடங்களாவது தண்ணீரில் நனைக்க வேண்டும். பின்னர் காயத்தின் தன்மைக்கேற்ப டாக்டரிடம் செல்லலாம்.

Image 962985

இதெல்லாம் கூடாது


தீக்காயத்தின் மீது அரிசிமாவு, டூத் பேஸ்ட், பேனா மை, எண்ணெய் போன்றவற்றைத் தடவக்கூடாது. இது காயம் குணமாவதை தாமத்தப்படுத்தும். டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லும் போது காயத்தின் ஆழத்தை சரிவர கண்டுபிடிக்க முடியாது.

காயம் ஏற்பட்ட இடத்தில் மோதிரம், வளையல், வாட்ச் போன்றவற்றை கழற்றி விட வேண்டும்.

காயத்தின் மீது ஏதாவது துணி ஒட்டிக்கொண்டிருந்தால் அதையும் பிரித்தெடுக்கக்கூடாது; அப்போது திசுக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

Image 962986
கொப்புளம் ஏற்பட்டிருந்தால் அதை உடைப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இன்பெக்ஷன் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

காயத்தின் மீது நேரடியாக ஐஸ்கட்டிகளை வைக்கும் போது காயம் பெரியதாகக்கூடும். அங்குள்ள ரத்தக்குழாய்களை சுருக்குவதால், ரத்தஓட்டமும் தடைப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us