sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறிந்துகொள்வோம்

/

பிறந்த குழந்தைக்குத் தேவையான பொருட்கள்

/

பிறந்த குழந்தைக்குத் தேவையான பொருட்கள்

பிறந்த குழந்தைக்குத் தேவையான பொருட்கள்

பிறந்த குழந்தைக்குத் தேவையான பொருட்கள்


UPDATED : ஜூலை 18, 2022 11:18 AM

ADDED : ஜூலை 18, 2022 11:13 AM

Google News

UPDATED : ஜூலை 18, 2022 11:18 AM ADDED : ஜூலை 18, 2022 11:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தை பிறப்பு அனைவர் வாழ்விலும் மிகச் சிறந்த தருணம். அதை எதிர்பார்த்து மொத்த குடும்பமும் 10 மாதங்கள் காத்திருக்கும். பிறந்த குழந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு வர நீங்கள் தயாராகும்போது, வீட்டில் இருக்கும் முதல் வாரங்களில் குழந்தைக்கு உண்மையில் என்ன தேவை என்று நீங்கள் குழப்பமடையலாம். புதிதாகப் பிறந்த முதல் இரண்டு மாதங்களுக்கு குழந்தைக்குத் தேவையான பல பொருட்கள் உள்ளன, அவை உங்களின் குழந்தைப் பராமரிப்பை மிகவும் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றும்.

பிறந்த குழந்தைக்கு தேவையான விஷயங்களின் பட்டியலைப் இங்கு காணலாம்.

ஆடை :

இரு பாலினருக்கு ஏற்ற பிறந்த குழந்தைகளுக்கான ஆடை தற்போது நிறைய கிடைக்கின்றது. அதனால் குறைந்தது ஒரு வாரத்திற்குத் தேவையான ஆடைகளை வாங்கி வைக்கலாம். அதேபோல் குழந்தை கதகதப்பாக இருக்க ஏதுவாக, பனியன் துணியில் கிடைக்கும் தலை கவசமுடன் கூடிய துண்டுகளையும் வாங்கலாம். குழந்தையின் துணிகளைத் தனியாக சுடு நீரில் துவைப்பது மிகவும் பாதுகாப்பானது.

படுக்கை :

Image 972108


குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு அதிக நேரம் தூக்கத்தில் தான் இருக்கும். அதனால் அந்த சமயத்தில் படுக்க ஏதுவாக, கொசுவலையுடன் கூடிய சிறிய படுக்கை செட்டை நீங்கள் வாங்கி வைக்கலாம். குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் என்பதால், அதை உறிஞ்சும் மேட்டும் கண்டிப்பாக வாங்கி கொள்ளுங்கள்.

மசாஜ் எண்ணெய்:

Image 972111
சந்தையில் பேபி ஆயில் என கூறப்படும் மசாஜ் எண்ணெய் கிடைக்கின்றன. இவை கொண்டு தினமும் குளிக்கும் முன் மசாஜ் செய்தால், குழந்தையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இரவில் குழந்தைகள் நன்கு தூங்கும். நம் வீட்டு பாட்டிகள் இதனால் தான், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு குழந்தையை நன்கு தேய்த்து, சிறிது நேரம் இளம் வெயில் நேரத்தில் படுக்க வைப்பார்கள். பின் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுவார்கள். அந்த பாட்டி மசாஜில் குழந்தை தூங்கும் அழகோ அழகுதான்.

மெனிக்யூர் செட்:

குழந்தைக்கும் நகம் வெட்டி மெனிக்யூர் செய்வது மிகவும் அவசியம். இல்லை என்றால் அவர்களது, சிறிய நகங்கள் முகத்தில் பல கீறல்களை இட்டுவிடும். அதனால் வாரம் இருமுறை நகம் வெட்ட இந்த மெனிக்யூர் செட் உபயோகமாக இருக்கும்.

பேபி வைப்ஸ்:

Image 972112


வாசனையற்ற நீர் கொண்ட துடைப்பான்கள் (பேபி வைப்ஸ்) பல நல்ல பிராண்ட்களில் கிடைக்கிறது. பிறந்த குழந்தை அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும். அந்த சமயத்தில் இந்த பேபி வைப்ஸ் கொண்டு துடைக்கலாம். வெளியே செல்லும் போது நீருக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இப்படி நல்ல பயன் உள்ள பொருள் இந்த பேபி வைப்ஸ்.

டயப்பர்கள்:

Image 972109


டயப்பர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்றாலும் மருத்துவமனை, மற்றும் வெளியே செல்லும் போது இது அதிகம் தேவைப்படுகிறது. நீங்கள் விரும்பினால் துணியினால் கூட டயப்பர்கள் வடிவில் செய்து குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் மறக்காமல், டயப்பர்கள், பேபி வைப்ஸ் போன்ற மக்காத கழிவுகளை கவனத்துடன் குப்பையில் போடவும்.

பருத்தி மிட்டன்:

Image 972110


மிட்டன்கள் என்பது பிஞ்சு கை, கால்களை மறைக்க உதவும் சாக்ஸ் போன்ற உறைகள். இதனால் கை, கால்கள் கதகதப்பாக இருக்கும் மேலும் வாயில் கைவைக்கும் பழக்கம் குழந்தைக்கு இருக்காது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இது அவசியம்






      Dinamalar
      Follow us