sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறிந்துகொள்வோம்

/

மனித உடலில் உயிர் எங்கே உள்ளது தெரியுமா?

/

மனித உடலில் உயிர் எங்கே உள்ளது தெரியுமா?

மனித உடலில் உயிர் எங்கே உள்ளது தெரியுமா?

மனித உடலில் உயிர் எங்கே உள்ளது தெரியுமா?


UPDATED : ஆக 21, 2022 12:21 PM

ADDED : ஆக 20, 2022 08:17 PM

Google News

UPDATED : ஆக 21, 2022 12:21 PM ADDED : ஆக 20, 2022 08:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'உயிர் எங்கே உள்ளது?' இந்தக் கேள்விக்கு விடை அறிய பல நூறு ஆண்டுகளாக மருத்துவ வல்லுனர்கள் பலவித ஆராய்சிகளை மேற்கொண்டு பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் இன்றுவரை இது ஒரு கருத்து வேறுபாடுகள் கொண்ட குழப்பம் நிறைந்த கேள்வியாகவே இருந்து வருகிறது. மத புராணங்களிலும் இதிகாசங்களிலும் உயிர் கை, கால், தொடை, இதயம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருப்பதாக கதைகள் உலா வருகின்றன.

Image 985117


மறுபுறம் விஞ்ஞானமோ உயிர் மனித உயிரிகளில் உள்ளது எனவும் மனிதனின் கோடிக்கணக்கான உயிரிகளும் உயிருடன் இருப்பதால் இந்த முடிவே சரியானதென்றும் வாதிடுகிறது. ஆனால் இந்த கேள்விக்கான ஊகங்கள் நீண்டுகொண்டே தான் உள்ளன.

சரி, உயிர் உண்மையில் எங்குதான் உள்ளது எனக் கேட்டால் இதற்கு பல பதில்கள் கூறப்படுகின்றன. இந்த பதில்கள் பற்பல ஆண்டுகால ஆராய்ச்சியின் விளைவாக உருவானவையே. மனித மூளை செயலிழந்தால் உயிர் போய்விடுமா என்று கேட்டால், கிடையாது. கோமா நிலைக்குச் செல்பவர்களுக்குக்கூட இதயம் துடித்துக்கொண்டுதான் இருக்கும்.

அதே சமயம் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யும்போது மருத்துவர்கள் இயந்திரத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை நிறைவடையும்வரை ரத்த நாளங்களுக்கு ரத்தத்தை அளிக்க ஏற்பாடு செய்வர். எனவே இதயத்திலும் உயிர் இல்லை எனலாம். இதேபோல சிறுகுடல், கல்லீரல், கணையம் என எந்த பாகத்தை அறுவை சிகிச்சையில் அகற்றும்போதும் உயிர் போவதில்லை.

Image 985118


விஞ்ஞானி ஒருவர் கோழியில் தலையை வெட்டி அந்த தலையில்லா கோழிக்கு உணவை கழுத்துப் பகுதியில் உள்ள உணவுக் குழாய்க்கு ஊசி மூலமாக அளித்து சோதனை செய்தார். ஆனால் இந்த தலையில்லா கோழி இவ்வாறு உணவு உண்டு ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்தது. இதேபோல சில பறவைகளுக்கு மூளை இல்லாமலும் உயிரை உடலில் தக்கவைக்கும் ஆற்றல் உள்ளது.

குறிப்பிட்ட ஓர் உடற்பாகத்தில் உயிர் இல்லை என்றால், உயிரி கோட்பாட்டையே நம்பவேண்டியுள்ளது. நமது உடல் உயிரிகளின் குரோமோசோம்களில் உயிர் இருக்கலாமென இப்போதைக்கு விஞ்ஞானம் இந்த கேள்விக்கு தற்காலிக பதிலை அளிக்கிறது. ஆனால் இந்த பதிலிலும் திருப்தி அடையாத ஆய்வாளர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை






      Dinamalar
      Follow us