/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
வீட்டில் வளர்க்க ஏற்றவை செடிகளா... மரங்களா?
/
வீட்டில் வளர்க்க ஏற்றவை செடிகளா... மரங்களா?
UPDATED : செப் 28, 2022 06:57 PM
ADDED : செப் 28, 2022 06:34 PM

வீட்டைச் சுற்றிலும் உள்ள இடத்திற்கு ஏற்ப சிறிய வகையிலான செடிகள் வளர்ப்பதா அல்லது மரங்களை வளர்ப்பதா என முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், போதுமான இடம் இருக்கும்பட்சத்தில் செடிகள் வளர்ப்பதை விட மரங்கள் வளர்ப்பது நல்லது. சுவையான பழங்களை தரக்கூடிய மரங்கள், மற்றும் நிழல் தரக்கூடிய மரங்களை வளர்ப்பதன் மூலம் நாம் வசிக்கும் வீட்டை இரண்டு மடங்கு பசுமையாக்கலாம்.
வேப்ப மரம், அரச மரம், புங்கை மரம் ஆகியவை நிழல் மற்றும் சுத்தமான காற்றை இரவிலும் தரக்கூடியவை. இந்த மூன்றில் கண்டிப்பாக இரண்டு வைக்கவும். இவை வீட்டின் அருகில் வைக்கலாம். அது தவிர போதிய இட வசதி இருப்பின் உங்களுக்கு தேவைப்படும் பூ மற்றும் கனி தரக்கூடிய எந்த மரம் வேண்டுமானாலும் வைக்கலாம். இவை 24மணி நேரமும் ஆக்சிசன் தரும்.
![]() |
பெரும்பாலான பழமரங்கள் அளவில் சிறியதாகவும் நாம் உண்ணுதற்கு ருசியான மற்றும் சத்தான பழங்களை வழங்குகின்றன. அதுமட்டும் இல்லாமல் பழங்களை உண்ணுவதற்கு பறவைகள்,அணில்கள் மற்றும் பழந்தின்னி வவ்வால்கள் வரும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு பறவைகளின் சத்தம் மிகுந்த மகிழ்ச்சியை தரும்.
பப்பாளி
![]() |
எளிமையாக வளர்க்கலாம். காய்த்துக்கொண்டே இருக்கும். மற்ற மரங்களை விட இதனை வேகமாக வளர்த்து விடலாம். பப்பாளியில் சுவையும் சத்துக்களும் அதிகம்.
மாதுளை
![]() |
சீதா மரம்
![]() |
நெல்லி
![]() |
வேம்பு
![]() |
அதேபோல், மலர்களைக் கண்டு மயங்காதவர்கள் யாரும் இல்லை. கண்ணுக்கு குளிர்ச்சியும் மனதிற்கு மகிழ்ச்சியும் தரக்கூடிய பூச்செடிகளை விட பூமரங்கள் மிகுந்த வண்ணமயமாக காட்சியளிக்கும்.
செம்மயில்கொன்றை
![]() |
மரமல்லி
![]() |
பூவரசு
![]() |
வாதுமை மரம்
![]() |
பொதுவாக, வேப்பமரம், முருங்கை மரம், பப்பாளி மரம், கொய்யா மரம் போன்றவை
வளர்ப்பது நல்லது. ஆனால், அவற்றின் வேர்கள் வீட்டின் அடிவாரத்தை ஊடுருவாமல்
பார்த்துக் கொள்ளவேண்டும்.











