/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
கடலில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
/
கடலில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
UPDATED : அக் 17, 2022 01:26 PM
ADDED : அக் 17, 2022 01:17 PM

வைட்டமின் 'கடல்' : பீச் சென்றால் இவ்வளவு நன்மையா...
அலையோடு விளையாடுவது மகிழ்ச்சியை அள்ளிதரும் என்பது அனைவரும் அறிந்ததே... அது மட்டுமல்ல கடலில் உடலுக்கு தேவையான அனைத்து தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அலை அலையாக கொட்டிக்கிடக்கிறது. மேலும் கடற்கரையில் கிடைக்கும் சூரிய ஒளியும் வைட்டமின் - டி நிறைந்துள்ளது. நம்மை அடித்து தாலாட்டும் அலைகளில் மிதக்கும்போது அதன் நன்மைகள் உங்கள் உடலில் உறிஞ்சப்பட்டு எல்லா வகைகளிலும் ஆரோக்கியத்தை தரும். அது மட்டுமா வயது பாராமல் குழந்தை போல் அலையை துரத்தி ஓடுவது, மனதையும் லேசாக்கும்
இப்படி கடற்கரைக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்:
சருமத்தை மேம்படுத்தும்:
![]() |
கடல் நீரில் குளிப்பதால் சருமத்திற்கு பல நன்மைகள் ஏற்படும். அதில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது. கடலின் உப்பு நீர் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு, இயற்கையான பொலிவு தரும். அது மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்கி முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கும். மேலும் சருமம் நீரேற்றமாக இருக்கும், அதனால் மிருதுவான சருமம் கிடைக்கும்.
கடல் நீரில் கலந்த மணல் கூட ஒரு ஸ்கிரப் போல செயல்ப்பட்டு சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். உப்பு நீர் அலை மூலமாக சருமத்தில் வேகமாக படுவதால் சருமம் இறுகும். ஆனால் அதிக அளவில் வெயில் அடிக்கும் போது செல்லக்கூடாது, அது சருமத்தை கருக்க செய்யும். சன்ஸ்கிரீன் போட்டு போவது சருமத்தை பாதுக்காக்கும்.
அமைதி தரும் நீலக்கடல்:
![]() |
சிவப்பிற்கு கோவம், வெள்ளைக்கு சாந்தம் என ஒவ்வொரு நிறமும் உங்கள் மன நிலையை மாற்றும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல் மூளையின் ஆற்றலை அதிகப்படுத்தும் தன்மை நீல நிறத்திற்கு உண்டு. அதனால் தான் கணிணியில் கூட அதிக அளவில் நீல நிறம் காணப்படும். நீல நிறத்தைப் பார்ப்பது நமது மனநிலையை அமைதிப்படுத்துகிறது, கண்களை இயல்பாகவே ரிலாக்ஸாக இருக்க செய்யும். மேலும் அதிக நேரம் கடற்கரை ஓரம் இருப்பதால் அந்த இயற்கை சூழ்ந்த நீல நிறம் உங்கள் இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையைக் குறைக்கும்; உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.
வைட்டமின்-டி அதிகரிக்கும்:
![]() |
உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்-டி மிகமுக்கியப் பங்காற்றுகிறது. வைட்டமின்-டி எலும்புகள், பற்களை பலப்படுத்தும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை உறுத்திப்படுத்தி, நுரையீரல் செயல்பாட்டை சீர்ப்படுத்தும். சராசரியாக உடலில் வைட்டமின்-டி 30 நானோகிராம் அளவுக்கு இருக்க வேண்டும். ஆனால் பலருக்கும் அவ்வளவு இருப்பதில்லை. இத்தனை முக்கியதுவம் வாய்ந்த வைட்டமின்-டியை அள்ளி தருவது சூரிய ஒளி. அதை பெறுவதற்கு கடற்கரை ஒரு சிறந்த இடமாக இருக்குகிறது. கடற்கரை அருகில் இருந்தால் காலை அல்லது மாலை ஒரு வாக் செல்லலாம்.
கலோரிகளை எரிக்கும்:
![]() |
கடல் நீரில் நீந்துவது உடலின் கலோரிகளை அதிக அளவில் எரிக்கும். அதுவும் மாலை நேரத்தில் குளிர்ந்த நீரில் கடலில் குளிப்பது உடல் சூட்டை குறைக்கும். கடலில் நீந்துவது, ஆனந்தத்தை பெருக்கும் எண்டோர்பின் எனும் ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவும். கடலில் விளையாடிவிட்டு வந்தால் உடம்பு அடித்து போட்டது போல் இருக்கும். இதனால் இரவில் நல்ல உறக்கம் வரும். இவ்வாறாக ஒரு மசாஜ் மற்றும் அழகு 'ஸ்பா'விற்கு (spa) செல்வதை போல் கடற்கரை அமையும்.





