sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறிந்துகொள்வோம்

/

பைன் மர ரெசினால் இத்தனை பயன்களா?

/

பைன் மர ரெசினால் இத்தனை பயன்களா?

பைன் மர ரெசினால் இத்தனை பயன்களா?

பைன் மர ரெசினால் இத்தனை பயன்களா?


UPDATED : பிப் 21, 2023 01:03 PM

ADDED : பிப் 21, 2023 01:02 PM

Google News

UPDATED : பிப் 21, 2023 01:03 PM ADDED : பிப் 21, 2023 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைன் மரம் உலகில் உயரமாக வளரக் கூடிய மரங்களில் ஒன்று. ரஷ்யா, ஜப்பான், போர்ச்சுகல், கிழக்கு அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வளரும் இவை 24 மீட்டர் நீளம் வளரக்கூடியவை. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மரத்தில் இருந்து எடுக்கப்படும் ரெசின் (resin) என்னும் கோந்து போன்ற திரவம் பலவகையில் உதவுகிறது. பைன் மரத்தின் ரெசின் எந்தெந்த துறைகளில் உதவுகிறது எனத் தெரிந்துகொள்வோமா?

பைன் மரத்துக்கு வயதாக ஆக மரத்தின் வெளிப்பகுதியில் பிளவுகள் ஏற்பட்டு மற்ற மரங்கள்போல ரெசின் வெளியாகும். மரத்தின் சைலம் உயிரி என்சைம்கள் தயாரிக்கும் இந்த ரெசின் திரவம் மரத்தின் ஓரங்களில் இருந்து ஒழுகத் துவங்கும். மரத்தை கவனமாகக் கீறி இறுகிய இந்த திரவத்தை எடுத்து சூடாக்கி சுத்திகரித்தால் கிடைப்பதுதான் அடர்மஞ்சள் அல்லது தங்க நிறத்திலான ரெசின். கோந்து போன்று கைகளில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது ரெசின். இந்த ரெசினில் பல்வேறு தாதுக்கள், சர்க்கரை, ஊட்டச்சத்துகள் அடங்கி இருக்கும்.

ரெசினில் கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் தன்மை உண்டு. இதனால் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ய ரெசின் பயன்படுகிறது. வைட்டமின் சி அதிகம் நிறைந்த ரெசினை அடிபட்ட இடத்தில் தடவி மருத்துவமனை கொண்டு செல்லும் வரை ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கலாம்.

Image 1071695


எக்ஸீமா உள்ளிட்ட சரும நோய்களை குணப்படுத்தவும் பைன் ரெசின் பயன்படும். எனவே ஆயின்மென்ட் மருந்து தயாரிக்கும் துறையில் ரெசின் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பேப்பர், உதிரி பாகங்களை இணைத்து ஒட்டும் கோந்து தயாரிக்கும் தொழிலில் மூலப் பொருளாக ரெசின் பயன்படுகிறது.

டர்பெண்டைன் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. டர்பெண்டைன் ஓவியத்துறை, கட்டுமானத் துறை என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

தொண்டை கரகரப்புக்கு நாட்டு மருந்து தயாரிக்க ரெசின் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

பைன் ரெசினில் சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு ரோசின் என்னும் கட்டி தயாரிக்கப்படுகிறது. வயலின், வியோலா, செலோ, டபுள் பேஸ், சாரங்கி, தில்ருபா உள்ளிட்ட போயிங் இசைக் கருவிகளில் போ-வில் உள்ள குதிரை வால் முடிமிது இந்த ரோசின் அழுத்தி தேய்க்கப்படும். வயலின் கம்பிகள்மீது ரோசின் தடவப்பட்ட குதிரை முடிக்கற்றை உராயும்போது இரும்பு கம்பிக்கும் குதிரை முடிக்கும் இடையே உராய்வு ஏற்பட்டு இசை பிறக்கும்.






      Dinamalar
      Follow us