sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறிந்துகொள்வோம்

/

புவியீர்ப்பு விசை செயல்படாத உலகின் விசித்திர இடங்கள்!

/

புவியீர்ப்பு விசை செயல்படாத உலகின் விசித்திர இடங்கள்!

புவியீர்ப்பு விசை செயல்படாத உலகின் விசித்திர இடங்கள்!

புவியீர்ப்பு விசை செயல்படாத உலகின் விசித்திர இடங்கள்!


UPDATED : ஜன 25, 2023 10:45 AM

ADDED : ஜன 24, 2023 03:12 PM

Google News

UPDATED : ஜன 25, 2023 10:45 AM ADDED : ஜன 24, 2023 03:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவியீர்ப்பு விசை உலகம் முழுவதும் சமமாக பரவியுள்ளது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் அறிவியலுக்கே சவால்விடும் விதமாக, புவியீர்ப்பு விசை செயல்படாமல் விசித்திரமான நிகழ்வுகள் நிகழும் சில இடங்கள் இந்த உலகில் உள்ளன.இதுபோன்று புவியீர்ப்பு விசை செயல்படாத அல்லது பூஜ்ஜியமாக உள்ள இடங்களைப் பற்றி பார்க்கலாம்.

மிஸ்டரி ஸ்பாட் (கலிஃபோர்னியா)

Image 1058260
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா க்ரூஸ் பகுதியில் சுமார் 150 அடி சுற்றளவில் இந்த இடம் அமைந்துள்ளது.இந்த இடத்தில் ஏதோ ரகசியம் இருப்பதாக ஆய்வாளர்கள் உணர்ந்தனர். அதை ஆழமாக ஆராய்ந்த போதுதான், ​​இங்கு 150 சதுர அடி பரப்பளவில் புவியீர்ப்பு விசை செயல்படாது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.பின்னர் 1940 ஆம் ஆண்டு இங்கு ஒரு வீடு கட்டி மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இந்த மர்ம இடத்தில் நீங்கள் அந்தரத்தில் நடந்து செல்லவது போல் இருக்கும்.கிட்டதட்ட 60 டிகிரி சாய்ந்து நடபது போலவும்,மலை மேல் ஏறுவது போலவும் உணர்விர்கள் .சுவாரஸ்யம் கருதி பெருபாலான மக்கள் மிஸ்டரி ஸ்பாட்க்கு வருகின்றனர்.

மேக்னடிக் ஹில் (இந்தியா)

Image 1058261
லடாக்கின் லே-கார்கில் நெடுஞ்சாலையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் உங்கள் வாகனத்தை நடுநிலையாக வைத்திருந்தால், அது தானாகவே, மெதுவாக நகரத் தொடங்கும்.மேலும் மணிக்கு 20 கிலோமீட்டர் வரை தானாகவே செல்லகிறது. இந்த மர்மமான நிகழ்வுகளுக்குப் பின்னால் காரை மேல்நோக்கி இழுக்கும் ஒரு காந்த சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை கடந்து செல்லும் விமானம் கூட காந்த குறுக்கீட்டைத் தவிர்க்க அவற்றின் உயரத்தை அதிகரிக்கிறது.

கியாகிடியோ பகோடா, (மியான்மர்)

Image 1058259
தங்க மலை என அழைக்கப்படும் இந்த இடம் பர்மாவில் அமைந்துள்ள புத்தமத வழிபாட்டு தலம். இந்த மலை மீது தங்க நிறத்தில் குன்று ஓன்று உள்ளது.இது திடீரென்று பார்க்கையில் விழவது போன்று தோன்றும். ஆனால், அதே இடத்தில் 2,500 ஆண்டுகளாக உள்ளது.

மேல்நோக்கி செல்லும் அருவி, (இந்தியா)

Image 1058257
தமிழில் நீர்வீழ்ச்சி என்ற சொல் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீரானது கீழ் திசையை நோக்கி செல்லுதலே இந்த சொல்லுக்கான பெயர் காரணம். ஆனால், நீர் மேல் நோக்கி பாயும் விசித்திரத்தை நீங்கள் பார்த்ததுண்டா? மகாராஷ்டிர மாநிலம், கொங்கன் கடலோரப் பகுதியை ஒட்டிய டெக்கான் மலைப்பகுதியில் இந்த அருவி இருக்கிறது. இங்கு காற்றின் திசை மேல்நோக்கி பலமடங்கு வேகமாக சுழல்வதால் அருவியானது மேல்நோக்கி பாய்கிறது.

ஹூவர் அணை, (அமெரிக்கா)

Image 1058258
நெவாடாவில் உள்ள ஹூவர் அணை சுமார் 221.4 மீட்டர் உயரம் கொண்டது. இந்த அணைக்கு சென்று பாட்டிலில் இருந்து நீங்கள் தண்ணீரை ஊற்றினால், தண்ணீர் துளிகள் கீழே விழாமல் காற்றில் பறந்து கொண்டிருக்கும்.இந்த அணையின் கட்டமைப்பு காரணமாக காற்று பலமடங்கு வேகமாக மேல்நோக்கி வீசுகிறது. இதன் விளைவாக இதில் ஊற்றும் தண்ணீர் காற்றில் மேல்நோக்கி பறக்கிறது.

மவுண்ட் அராகட்ஸ்,(அர்மேனியா)

Image 1058263
இந்த இடம் துருக்கி மற்றும் அர்மேனியா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு ஒரு காரை நியூட்ரல் போட்டு நிறுத்தினாலும், தானாகவே மலையேறிச் செல்கிறதாம். இங்கு புவியீர்ப்பு விசை இல்லை என்பதால் இப்படி நடக்கிறது என்று கூறப்படுகிறது.இதை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்காண மக்கள் இங்கு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us