தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறிந்துகொள்வோம்/'TIGER KA HUKUM' சூப்பர்ஸ்டார் ஜெயிலர் 2-வது சிங்கிள் - பொருள் அறிவோம்..!

'TIGER KA HUKUM' சூப்பர்ஸ்டார் ஜெயிலர் 2-வது சிங்கிள் - பொருள் அறிவோம்..!

'TIGER KA HUKUM' சூப்பர்ஸ்டார் ஜெயிலர் 2-வது சிங்கிள் - பொருள் அறிவோம்..!


UPDATED : ஜூலை 18, 2023 06:09 PM

ADDED : ஜூலை 18, 2023 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2023 06:09 PM ADDED : ஜூலை 18, 2023 12:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‛ஜெயிலர்'. அவருடன் சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மிர்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சற்றே முதிர்ந்த தோற்றத்தில் ஜெயிலர் வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். ஆக., 10ல் படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‛காவாலா' என்ற பாடலை வெளியிட்டனர்.

அதில் தமன்னாவின் 'காவாலைய்யா..' குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது வரை அந்த பாடலை 45 மில்லியனுக்கும் அதிகமான பேர் யு-டியூப்பில் பார்வையிட்டுள்ளனர். இப்போது அடுத்தப்படியாக ஹூக்கும் என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். பாடல் வரிகளை சூப்பர் சுப்பு என்பவர் எழுத, அனிருத் இசையமைத்து பாடி உள்ளார். ரஜினியின் மாஸை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாடல் வெளியான 15 நிமிடத்திலேயே 2.15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் யுடியூப்பில் கிடைத்தன. தற்போது பாடல் வெளியாகி 17 மணி நேரத்தில் அரை கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது ஹுகும்.

Image 1142420


பாடல் வெளியானதையடுத்து 'டைகர் கா ஹும்' என்றால் என்ன என்று பலர் இணையத்தில் தேடிவருகின்றனர். மேம்போக்காகப் பார்த்தால் இந்தியில் புலியின் உத்தரவு என கூகுள் டிராஸ்லேட் காண்பிப்பதை அனைவரும் அறிவர். ஹுகும் என்கிற வார்த்தையின் வரலாறு குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

ஹுகும் என்பது அரபி மொழிலிருந்து பிறந்த வார்த்தை. இதற்கு பல பொருட்கள் உள்ளன. இந்த வார்த்தை பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பயன்படுத்தப் படுத்தப்படுகிறது. ஹுகும் என்பது பஞ்சாபியில் உத்தரவு அல்லது புனிதக் கட்டளை எனப் பொருள்படும். சீக்கிய மதத்தில் கடவுளின் வழிகாட்டுதலின்படி ஒரு பிரச்னையை எவ்வாறு சரிவரக் கையாளுவது என்பதைக் குறிக்கும் சொல்லாக ஹுகும் உள்ளது.

கடவுளின் அருளால் மகிழ்ச்சி மூலம் மன அமைதியைப் பெறுவதைக் குறிக்கவும் சீக்கியர்கள் ஹுகும் என்கிற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் கேள்விக்கு கடவுள் அளிக்கும் பதில் என்பதையும் பஞ்சாபி மொழியில் ஹுகும் எனக் கூறுகின்றனர். இவ்வாறாக ஹுகும் என்கிற ஒற்றை வார்த்தைக்கு பல மொழிகளில் பலவித பொருட்களைக் கற்பிக்கின்றனர். ரஜினி இதில் 'புலியின் உத்தரவு' என்பதைக் குறிக்கவே 'டைகர் கா ஹுகும்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார் என கணிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us