sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறிந்துகொள்வோம்/'ஆமை'யார் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்!

'ஆமை'யார் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்!

'ஆமை'யார் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்!


UPDATED : டிச 31, 2022 09:19 PM

ADDED : டிச 31, 2022 09:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2022 09:19 PM ADDED : டிச 31, 2022 09:13 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனிமை விரும்பிகளான ஆமைகள் பொறுமைக்கு உதாரணமாகப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்படும். அதிக ஆயுட்காலங்களைக் கொண்டுள்ள ஆமையின் இதயம் பொறுமையாகத் துடிப்பதே இதற்குக் காரணம். இப்படிப் பல உதாரணங்களை உள்ளடக்கிய ஆமையைப் பற்றி அறிந்திராத சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆமைகள் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால், தற்காத்துக்கொள்ள ஓட்டினுள் ஒளிந்து கொள்ளும். மெதுவாக மட்டுமே இயங்கும். 300 ஆண்டுகள் வரை வாழும்.

Image 1047438
உணவுகளைப் பொறுத்தவரைக் கிழங்கு, இலை, தாவரத்தின் தண்டுகளை மட்டுமே உண்ணும். இதில் விதிவிலக்காக ஒருசில வகை கடல் ஆமைகள் மட்டுமே மாமிச உண்ணிகளாக உள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்ப நிலத்திலும், நீரிலும் வாழும் தன்மை கொண்டது. நிலத்தில் வாழும் ஆமைகளை டார்டாய்ஸ்(Tortoise)என்றும், நீரில் வாழும் ஆமைகளை டைட்டில் என்றும் அழைக்கப்படும்.டைனோசர் காலத்தில் வாழ்ந்த ஒரு சில உயிரினங்களில் நாம் வாழும் காலத்தில் வாழ்கின்றன. அவற்றில் ஆமைகளும் ஒன்று. மிகவும் பழமை வாய்ந்த உரியினமான ஆமை, 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பூமியில் வாழ்ந்து வருகின்றன.

Image 1047439
ஆமைகளை ஒருசில பகுதிகளில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிகம் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சந்ததி,சந்ததியாக குடும்பத்தில் அங்கம் வகிக்கும்.

அண்டார்டிகா கண்டத்தைத் தவிர்த்து உலகின் அனைத்துப் பகுதியிலும் ஆமைகள் வளர்கிறது. இந்தியாவில் ஐவகை நிலத்திலும் ஆமைகள் வளரும்.

Image 1047440
1835ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் தனது ஆய்விற்காகப் பயன்படுத்திய ஹாரியாட் ஆமை கடந்த 2006ஆம் ஆண்டு இறந்தது என்றும், 176ஆண்டுகள் வாழ்நாளைக் கொண்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

Image 1047441
தனது ஆயுளைக் காக்கும் ஆமை ஓடுகள் ஒரு அமைப்பைக் கொண்டவை கிடையாது. மாறாக 60 எலும்புகளால் ஆனது. இவை தனித்தே செயல்பட விரும்பும். அதிக நேரம் மூச்சுவிடாமல் இருக்கும்.

குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டாத வரை ஆண்,பெண் பாலினத்தை ஆமை இனத்தில் அறிந்து கொள்வது கடினம். ஆமைகள் தொண்டை வழியாக வாசனைகளை நுகரும் தன்மை கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us