sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 05, 2026 ,சித்திரை 22, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறிந்துகொள்வோம்

/

ஐஸ்கட்டி பயன்படுத்தி இந்த 6 பிரச்னைகளை தீர்க்கலாம்..!

/

ஐஸ்கட்டி பயன்படுத்தி இந்த 6 பிரச்னைகளை தீர்க்கலாம்..!

ஐஸ்கட்டி பயன்படுத்தி இந்த 6 பிரச்னைகளை தீர்க்கலாம்..!

ஐஸ்கட்டி பயன்படுத்தி இந்த 6 பிரச்னைகளை தீர்க்கலாம்..!


UPDATED : ஆக 30, 2023 05:35 PM

ADDED : ஆக 30, 2023 05:33 PM

Google News

UPDATED : ஆக 30, 2023 05:35 PM ADDED : ஆக 30, 2023 05:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், தினமும் ஐஸ்கட்டியை கொண்டு முகத்தில் மசாஜ் செய்வதால், முகப்பரு குறைந்து ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஐஸ்கட்டியை நேரடியாக முகத்தில் வைப்பதால் காயம் ஏற்படலாம். எனவே ஐஸ்கட்டிகளை ஒரு துணி அல்லது கவரில் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம்.

1.வீக்கத்தை குறைக்கும் :

முகத்தில் ஐஸ்கட்டிகளை பயன்படுத்தும் போது ரத்த நாளங்கள் சுருங்குவதால் ஏற்படும் நாள்பட்ட வீக்கம் குறையும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சுளுக்கு, காயம் போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதில் ஐஸ்கட்டிகள் நல்ல பலனை தரும்.

2. வலி நிவாரணி :

ஐஸ் தெரபி என்பது ஐஸ்கட்டிகளை சருமத்தின் நரம்புகளில் வைக்கும் போது தற்காலிக வலி நிவாரணியாக செயல்படும். வலி உணர்வை குறைப்பதில் ஐஸ்கட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

3. ஒற்றை தலைவலிக்கு தீர்வு :

Image 1162730
மைக்ரேன் அல்லது ஒற்றை தலைவலி சமயத்தில்,ஐஸ்கட்டிகள் பேக்குகளை தலையில் அல்லது கழுத்தில் வைத்தால், தலைவலியால் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும்.

4. சரும எரிச்சல் நீங்க :

சருமத்தில் முகப்பரு, மரு போன்றவற்றால் அவதிப்படுவோர், ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்வதால், தற்காலிகமாக சிவந்து போதல் மற்றும் எரிச்சல் கட்டுக்குள் வரும்.

5. உடற்பயிற்சி நிவாரணி :

Image 1162731
விளையாட்டு வீரர்கள் மைதானங்களில் அடிபடும் சமயங்களில், ஐஸ் குளியல் அல்லது ஐஸ் பேக் கொண்டு மசாஜ் செய்வர். இது விரைவில் அவர்கள் குணமடைந்து மைதானத்துக்கு திரும்ப உதவுகிறது.

6. தசைப்பிடிப்பு நிவாரணி :

Image 1162732
தோள்பட்டை அல்லது முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டால், ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்வதால், வலி, சோர்வு நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் தசைப்பிடிப்புக்கு ஐஸ் பேக் கொண்டு மசாஜ் செய்யலாம்.






      Dinamalar
      Follow us