/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
தமிழ் அறிவோம்; சல சல சலவென இரட்டைக்கிளவி..!
/
தமிழ் அறிவோம்; சல சல சலவென இரட்டைக்கிளவி..!
UPDATED : ஏப் 29, 2023 04:35 PM
ADDED : ஏப் 29, 2023 03:55 PM

இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய் சேர்ந்து ஒரு தன்மைப்பட்டு நின்று, வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது. இரட்டைக்கிளவி பெரும்பாலும் ஓசை, ஒரு பொருளின் தன்மை, குணம் ஆகியவற்றைக் குறிப்பதால் இவை எப்படி வேண்டுமானாலும் அமைந்து இருக்க வாய்ப்புள்ளது.
உதாரணம்
வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ” - திருப்புகழ்
இந்தப் பாட்டில் அமுது வழவழப்புத் தன்மையுடன் இருப்பது தெரிகிறது. அது கீழே விழும்போது அது கொழகொழவென பசைத் தன்மையுடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
![]() |
மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
நீர் சலசல என ஓடிற்று
மரம் மடமட என முறிந்தது
கசகச என வேர்வை
கலகலப்பான பேச்சு
கடகட என சிரித்தான்
கமகம என மணந்தது முல்லை
தமிழ் சினிமாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், வாலி, கண்ணதாசன், வைரமுத்து, நா.முத்துகுமார் உள்ளிட்ட பல கவிஞர்கள் இரட்டைக் கிளவியை சினிமாப் பாடல்களில் பயன்படுத்தியுள்ளனர்.


