Arul Narayanan ( 691 )
தொகுதி மறுசீரமைப்பு செய்யவெல்லாம் மெனக்கெட தேவை இல்லை. இருக்கிற மக்களவைத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொகுதி ஏற்படுத்த வேண்டியது தான். ஒரு மாநிலத்திற்குள் இரண்டு அடங்கவில்லை என்றால் மிஞ்சும் தொகுதிகளில் மூன்றை ஒருங்கிணைப்பு செய்யலாம். ஒரே தொகுதி கொண்ட இரண்டு மாநிலங்களை இணைத்து ஒரு மகளிர் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கலாம். மகளிர் பிரதிநிகளை மகளிர் மட்டுமே கட்சி சார்பில்லாமல் தேர்ந்தெடுக்க செய்யலாம். ஆட்சி அமைக்க உரிமை கோர பொது தொகுதி உறுப்பினர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். மசோதாக்களை மகளிரையும் உள்ளடக்கிய சபையில் நிறைவேற்றலாம். மகளிரைப் பாதிக்கும் மசோதாக்களை மகளிர் தொகுதி உறுப்பினர்களின் பெரும்பான்மை கொண்டு ரத்து செய்ய வகை செய்யலாம்.
மத்திய அரசிடமும் மேலும் மேலும் வாங்கி இலவசங்களை வெள்ளமாக பாய விட்டு மேலும் மேலும் கடனாளி? தமிழக பொருளாதாரத்தின் வலிமைக்கு அடுத்தவருக்கு உதவலாம் அல்லது கடனே கொடுக்கலாம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து ஊழலற்ற அரசை நடத்தினால் மேலும் பல பெருந் தொழில்களை தமிழகத்திற்கு கொண்டு வரலாம்.
தேசம் மட்டும் தீர்வுகளைத் தேடவில்லை. உலகமே தேடிக் கொண்டு இருக்கின்றது. பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கிட்டத்தட்ட இந்தியாவில் மட்டுமே மோடி தலைமையினால் சாமானிய மக்கள் உலக பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்படாது நிம்மதியாக இருக்கிறார்கள். அதனால் தான் திமுக குடும்பமும் அளவில்லா சொத்து சுகம் சேர்த்து வெளிநாட்டில் கூட பதுக்க முடிகிறது.
விவசாய வேலை வாய்ப்புகள் குறைந்து மற்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் பெருகுவது பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் தானே. விவசாய பொருட்களின் உற்பத்தி வளர்ந்து கொண்டு தானே இருக்கிறது?
வேலைவாய்ப்பு என்பதை நடைமுறை சாத்தியக் கூறுகளுடன் அணுக வேண்டும். போதிய வேலை வாய்ப்பு இல்லை என்றால் வெளி மாநிலத்தவர்கள் கூலி வேலை மட்டுமல்லாது ரயில்வே போன்ற நிறுவனங்களில் கூட எப்படி உள்ளே நுழைந்து விட்டனர் என்று யோசிக்க வேண்டும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது மட்டுமே தான் உண்மை. 1990கள் வரை கூட நிலவிய வேலை இல்லா திண்டாட்டத்தோடு ஒப்பிடுகையில் 2010களின் வளர்ச்சி பிரமாண்டமானது. ஆனால் அதே வளர்ச்சியை ஒவ்வொரு வருடமும் எதிர் பார்க்க முடியுமா? 1991ல் நரசிம்ம ராவ் ஏற்படுத்திய திருப்புமுனைக்கு 10 வருடங்கள் கழித்து வாஜ்பாய் காலம் மேலும் ஒரு பத்தாண்டு கழித்து மோடி அவர்கள் பொருளாதாரத்தை அணுகுவதில் வித்தியாசம் என திருப்புமுனைகள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன. நடந்த நல்லவைகளை நினைவூட்டி மக்களை உற்சாகப் படுத்த வேண்டும்.
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற உயர் கல்வி அமைச்சர் போல திருக்குறளை தப்பாய் பாடவா?
பாஜகவிற்கு ஓட்டு அளிக்கும் மக்களுடைய ஓட்டுரிமையை பறித்து விட்டு ஆட்சிக்கு எப்படி வருவீர்கள்? சிஏஏ சட்ட திருத்தம் கொண்டு வந்து ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் கூட ஆதரவாளர்களுக்கே குடியுரிமை பெற்று தராத கட்சியை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?
வெட்கம் மானம் எல்லாம் பார்த்தால் பெரிய பதவியில் அமர்ந்து கொழுத்த சம்பளம் கிம்பளம் வாங்கி செழிப்பாக வாழ முடியுமா?
ரிப்போர்ட் பயங்கரமாக உள்ளது. தொகுதி மக்கள் எவ்வளவு தூரம் விழிப்போடு இருக்கிறார்களோ தெரியவில்லை. விழிப்புணர்வையும் நோட்டால் தோற்கடித்து விடுவார்களோ?
விசில் கட்சி தலைவர் தேர்தலில் பிசியாக உள்ளாரா? காமெடி பண்ணாதீங்க.


