
வைகையின் வரலாறை தேனி மாவட்டத்தை குறிப்பிடாமல் எழுத முடியாததைப் போன்றதே, 'காருண்யா'வின் பெயரை தவிர்த்து விட்டு இனி தேனி, சில்லமரத்துப்பட்டி கிராமத்தின் சிலம்பக்கலை வரலாறு எழுதுவதும்!
தேனி மாவட்டம் போடிநாயக் கனுாரில் வசிக்கும் 20 வயது காருண்யா, உயிரி வேதியியல் பட்டதாரி. சிலம்பத்தில் இவரது சில சாதனைகள்...
* பர்ஸ்ட் நேஷனல் லெவல் சிலம்பம் சாம்பியன்ஷிப் - 2022, பெங்களூரு - தங்கம்
* செகண்ட் நேஷனல் லெவல் சிலம்பம் சாம்பியன்ஷிப் - 2023, பெங்களூரு - தங்கம்
* நேஷனல் லெவல் சிலம்பம் சாம்பியன்ஷிப் - 2024, பெங்களூரு - தங்கம்
அம்மா: ஊர்ல இருக்குற பசங்களைப் பார்த்துட்டு வந்து, 'அந்த அண்ணனுங்க மாதிரி நானும் சிலம்பம் கத்துக்கு றேன்மா'ன்னு காருண்யா சொன்ன நாள்தான், அவ எங்க கிராமத்தோட முதல் சிலம்ப வீராங்கனையா உருவான நாள்!
தோழி: போட்டிகளை காரண மாக்கி கல்லுாரி அனுமதியோட வகுப்புகளை தவிர்த்து, அடிக் கடி பயணம் பண்ற காருண்யா மேல எங்களுக்கு பொறாமை உண்டு. அதேநேரம், 'இந்தசூழல் லேயும் எப்படி இவ்வளவு மதிப்பெண் வாங்குறா'ன்னு ஆச்சரியப்படுறதும் உண்டு!
பயிற்சியாளர்: 'உருவத்துக் கும் வலிமைக்கும் தொடர் பில்லை'ங்கிறதுக்கு காருண்யா சிறந்த உதாரணம். சிலம்பம் தவிர்த்து தடகளம், குத்துச் சண்டை, வலு/பளு துாக்கு தல், கைப்பந்து போட்டிகள் லேயும் அவ கில்லி!
காருண்யாவுக்கு ஏன் சிலம்பம் அவசியம்?
கல்லுாரி கட்டணத்துல சலுகை கிடைக்குது. 'அரசு வேலை கிடைக்க உதவும்'னு நம்பிக்கை இருக்குது. இது இரண்டும் போக, என் கிரா மத்து பெண்களுக்கு நான் முன்னுதாரணம்! இதெல்லாத் தையும் விட...
தனியார் பேருந்து ஓட்டுனரா இருக்குற என் அப்பா, தன் களைப்பை பொருட்படுத்தாம என் பயிற்சியை அப்படி ரசிப் பார். என்கூட மேடையேறி பரிசு வாங்கினப்போ சந்தோ ஷத்துல தடுமாறின அம்மா, என் சாதனையை அணு அணுவா ரசிக்கிற அண்ணன்... இவங்களுக்காக சிலம்பம் எனக்கு அவசியம்!
வெற்றியின் ரகசியம்
* 'இதற்குமேல் முடியாது' எனும் எல்லை தாண்டி கூடுத லாக உழைக்கும் பழக்கம் காருண்யாவிற்கு இருக்கிறது!
* 'உழைப்பை விட அதிகம் களைப்பை தருவது சோம்பல்' எனும் புரிதல் சற்று அதீத மாகவே இருக்கிறது!
உடல் முறுக்கேறினால் தலைக் கனம் கூடுமாமே?
நிச்சயமா இல்லை; என்னை நோக்கி வர்ற விமர்சனங்களை சிரிச்சுக்கிட்டே கடந்து போற பக்குவத்தை இந்த வயசுல எனக்கு கொடுத்திருக்கிறது என் உடற்பயிற்சியும், சிலம்ப கலையும்தான்.
இந்த 'கில்லி'யின் கனவு...
'ராணுவ அதிகாரி' ஆகணும்.