தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/அவியல்/மோளிவுட் டைம்ஸ் (மலையாளம்)

மோளிவுட் டைம்ஸ் (மலையாளம்)

மோளிவுட் டைம்ஸ் (மலையாளம்)


PUBLISHED ON : ஜூன் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓர் உயிரின் கலையுலக கனவு

மலையாள திரைத்து றையில் சிறந்த 'திகில்' பட இயக்குனராகும் லட்சிய விதை சிறுவன் வினீத் மாதவன் மனதில் விழுகிறது; 'விதை விருட்ச மானதா' என்பதை நோக்கி இக்கதை பயணித்து இருந்தால், இது வழக்கமான படம்; ஆனால், விதை விழுந்த மண்ணின் தன்மை, செடியின் சுற்றம், அதன் வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்கள் என, பல அடுக்குகளில் இது விரிந்திருக்கி றது.

'கனவுக்காக காதலை இழந் தான்; திரைப் படம் இயக்கி பெற்றோரை பெ ருமைப் படுத்தினான்; தன்னை துச்சமாக எண்ணிய உறவினர்கள் முன் ஜெயித்துக் காட்டினான்' உள்ளிட்ட கொழகொழ காட்சிகள் இதில் இல்லை; மாறாக, 'தன்னம்பிக்கை என்பது நம்மை நாமே ஏமாற்றும் போங்கு ஆட்டம்' என்று நெத்தியடியாக உணர்த்துகிறது.

தனது முதல் திரைப்படத்தை இயக்கத் தயாராகும் வினீத் திரைத்துறையில் சந்திக்கும் ஆசாமிகள் வழியே வஞ்சகம், நேர்வழி, குறுக்குவழி, சந்தர்ப்பவாதம் வகையிலான மனித குணங்கள் அலசப்பட்டு இருக்கின்றன; மனோதத்துவம் சார்ந்த இவ்விஷயங்களை நகைச்சுவையாக பரிமாறியிருக்கிறார் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக்.

'எல்லாம் கடவுள் வகுத்த விதிப்படி தான் நடக்கும். நமது விதியை நாமே எழுதலாம் . வெற்றி பெற அதிர்ஷ்டமும் வேண்டும். நல்ல திறமை எங்கிருந்தாலும் அங்கீகரிக்கப்படும்' - இக் கருத்துக்கள் எந்தெந்த சந்தர்ப்பங்களில் எத்தகைய சமூக அந்தஸ்து உள்ளவர்களால் சொல்லப்படுகிறது என்பதை காட்சிகள் வழி கூறு போட்டிருக்கிறார் இயக்குனர்.

வினீத் மாதவன் எனும் இளைஞனை ஆர்வக் கோளாறில் சினிமா இயக்க வந்தவனாகவும், தான் நம்பும் கலைக்காக எந்த எல்லைக்கும் செல்பவனாகவும் ஒருசேர வடித்திருக்கிறது நஸ்லெனின் நடிப்பு; 'காமெடி - குணச்சித்திரம்' என எந்த பக்கமும் சாய்ந்து விடாமல் கயிற்றின் மீது திறமையாக நடந்திருக்கிறார்.

'கனவின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்' என்று சொல்லும் கதை, 'கனவினாலேயே நீங்கள் ஜெயித்து விட முடியாது' என்றும் சொல் கிறது. மனதிற்கு சிறந்த 'பாக்ஸிங்' பயிற்சி அளிக்க விரும்புவோர் முயற்சித்துப் பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பு.

ஆக...

பக்கத்து அரங்கின் ' பெத்தி 'யால் குத்துப்பட்டவனுக்கு இங்கு சிறந்த முறையில் சிகிச்சை தரப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us