தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/கில்லி: பதக்க வேட்டையில் பெண் வேங்கை

கில்லி: பதக்க வேட்டையில் பெண் வேங்கை

கில்லி: பதக்க வேட்டையில் பெண் வேங்கை


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, பூந்தமல்லி சவீதா சட்டக்கல்லுாரியின் மூன்றாம் ஆண்டு மாணவியான, 19 வயது கே.எம்.நறுமுகைக்கு வேலுார், அடுக்கம்பாறை பூர்வீகம். ஆறு வயதில் டென்னிஸ் மட்டையை கையில் எடுத்த இவருக்கு, 2017ல் பயிற்சியாளர் அசோக் மூலம் மென்மையான ரப்பர் பந்துகளால் விளையாடப்படும் 'சாப்ட் டென்னிஸ்' அறிமுகம்!

இதில், கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச அளவில் சாதித்து வருபவர், 'டென்னிஸ் மட்டையே என் முதல் தோழி' என்கிறார்.

நறுமுகையின் பார்வையில் 'சாம்பியன்' யார்?


என் வெற்றிகளுக்கு என் திறமை காரணம்; ஆனா, என் திறமை மெருகேற யார் காரணம்; தினமும் அதிகாலை 5:00 மணி பயிற்சிக்கு எனக்கு முன்னாடி எழுந்து, எனக்குத் தேவை யானதை தயார்படுத்தி, உள்ளூர், வெளிநாடு போட்டிகளுக்கு போறப்போ என் நிழலா வர்ற என் அம்மா; இவங்கதான் என் பார்வையில சாம்பியன்!

தற்போது, 'அண்டர் 21 மற்றும் சீனியர்' பிரிவில் சாதிக்கத் தயாராகி வரும் நறுமுகை...

* 10 வயதில், 'அண்டர் 14' பிரிவில், 'மத்திய பிரதேசம் - எஸ்.ஜி.எப்.ஐ.,போட்டி'யின் குழு பிரிவில் தேசிய அளவில் முதல் தங்கம் வென்றவர்!

* 15 வயதில், 'அண்டர் 15' பிரிவில், 'தாய்லாந்து ஐ.எஸ்.டி.எப்., போட்டி'யின் தனிப்பிரிவில் வெள்ளி பதக்கமும், இரட்டையர் பிரிவில் தங்க பதக்கமும், 'அண்டர் 18' தனிப்பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்றவர்!

* 18 வயதில், 'அண்டர் 18' பிரிவில், 'பஞ்சாப் இரண்டாவது ஆசிய ஜூனியர்ஸ் சாம்பியன்ஷிப்' போட்டியின் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும், குழு பிரிவில் தங்கமும் வென்றவர்!



'தோல்வி' பற்றி தங்களின் புரிதல்?


ஜெயித்ததுமே தோற்ற நபரோட கை குலுக்கணும். நாம சொல்றதை ஏத்துக்குற பக்குவத்துல அந்த நபர் இருந்தா, 'இந்த இடத்துல நீங்க தப்பு பண்ணினதால தான் நான் ஜெயிச்சேன்'னு அவர் தோல்விக்கான பிழையை நாம சுட்டிக் காட்டணும். அது அவரை இன்னும் மேம்படுத்த உதவும். என் சீனியர் அம்மு அக்கா இப்படித்தான் பண்ணுவாங்க!

அதேமாதிரி, யார் மேலேயும், எது மேலேயும் பழிபோடாம தோல்வியை ஏத்துக்கணும். 'மிகச்சிறந்த வெற்றி பெற, 'தோல்வி'தான் மிகச்சிறந்த ஊக்க மருந்து'ங்கிறது என் எண்ணம்!

நறுமுகையின் நினைவில் இன்னும் ஈரமாய்...

* என் 16வது பிறந்தநாளை கொண்டாட சேலம், பயிற்சி முகாமிற்கு வந்த என் பெற்றோரின் பாசம்

* 'ஜெர்ஸியிலேயே பார்த்த உன்னை இதில் பார்க்க ஆசை' என்று 'குர்தா' தந்த என் தோழியின் நட்பு

* 'உருவத்தை பார்த்து திறனை எடை போடாதே' என கற்றுத்தரும் என் ஆட்ட களங்கள்

* தகிக்கும் காய்ச்சலோடு 2025ல், அந்த சண்டிகர் போட்டியில் ஜெயித்த மூன்று பதக்கங்கள் - 1 தங்கம், 2 வெண்கலம்

நடப்பு ஆண்டில் ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் நடைபெற்ற 'கேலோ இந்தியா' தென்மண்டல போட்டி - தனிப் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று தன் பலத்தை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் வீராங்கனை நறுமுகை.



கில்லி'யின் நம்பிக்கை


'விளையாட்டு' - மனதிற்கு மிகச்சிறந்த சிகிச்சை தரும் அற்புத தோழன்!

63810 18091

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us