PUBLISHED ON : ஜூன் 14, 2026

'அப்புறம் என்னப்பா... உங்க வீட்டு குழாய்ல இப்போ பாயாசம் வந்திருச் சா'ன்னு கலாய்க்கிறான்டா அவன்!
வுடு மச்சான்... 'தமிழக மக்களுக்கு எல்லாம் தெரியும்; அவங்களை யாராலேயும் ஏமாத்த முடியாது'ன்னு பிரசாரம் பண்ணிட்டு, 'ஜெயிச்சிருக் கிறவங்க யாரு தெரியுமா; அமைச்சர்களா இருக்குறவங்க பின் னணி தெரியுமா'ன்னு சமீபகாலமா உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கிட்டே இருக்காரே... அவரைப் பத்தி ஏதாவது சொன்னானா?
ம்ஹும்... ஆனா, நான் கேட்டேன் மச்சி; 'முதல்வர் பதவிக்கு வருவேன்'னு சொன்ன ச.ஜோசப் விஜய் சொன்ன படியே செஞ்சுட்டார்; ஆனா, இன்றைய எதிர்க்கட்சி தலைவரோட அன்றைய இலக்கு என்னவா இருந்தது... தன் அப்பாவை முதல்வர் பதவியில மறு படியும் உட்கார வைக்கிறது; அதுல தோத்துப் போயிட்டார்தானே!
'திருச்சி மக்களுக்கு நன்றி சொல்லாம எம்.எல்.ஏ., பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா பண்ணினது தப்புன்னா, 'என் தந்தையின் தோல்விக்கு நானே பொறுப்பு'ன்னு உதயநிதி சொல்லி இருக்கணுமா இல்லையா'ன்னு கேட்டேன்!
அவன் பதில் சொன்னானா?
சொன்னான்... ஆனா, அது என் கேள்விக்கான பதில் இல்லை; 'தப்பு பண்ணிட்டோமோன்னு மக்கள் இப்போ வருத்தப்படுறாங்கன்னு உதயநிதி எப்படி சரியா கணிச்சு வைச்சிருக்கார் பார்த்தியா'ன்னு ரூட்டை மாத்திட்டான்.
அடங்கொய்யால... அதுக்கு நீ என்ன சொன்னே?
'அவர் கணிச்சது சரிதான்; 'தனித்து ஆட்சி அமைக்கிற 'மேஜிக் எண் வர்றமாதிரி ஓட்டு போடாம தப்பு பண்ணிட்டோமேன்னு மக்கள் ரொம்பவே வருத்தப் படுறாங்க'ன்னு சொன்னேன்.
ஹா... ஹா.... அழுதிருப்பானேடா?
அட... நீ வேற; 'பத்திரிகையாளர்களை சந்திக்காம வீட்டுக்குப் போய் அறிக்கை விடுறது ஆளுமையா'ன்னு 'லாலிபாப்' சப்பிக்கிட்டே மறுபடியும் கலாய்ச்சிட்டான்டா!
அய்யய்யோ... அப்புறம்...
விடுவேனா நானு... 'அன்னைக்கு சட்டசபையில பேசுனதும், இப்போ பேசுறதும் தன்னோட சொந்த கருத்துன்னா உதயநிதி ஏன் எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து வாசிக்கணும்'னு கேட்டுட்டேன்.
'இந்த ஆட்சி சீக்கிரம் கவுந்திரும்'னு சாபம் விட்டிருப்பானே...
ம்ம்ம்... என்கூட 'டூ'வும் விட்டுட்டான் மச்சி.
