sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

மிஸ்டர் மூளைக்காரன் c/o தமிழ்நாடு

/

மிஸ்டர் மூளைக்காரன் c/o தமிழ்நாடு

மிஸ்டர் மூளைக்காரன் c/o தமிழ்நாடு

மிஸ்டர் மூளைக்காரன் c/o தமிழ்நாடு


PUBLISHED ON : ஜூன் 08, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 08, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹேய்ய்... வாத்து பாரு... வாத்து... அவனுங்க இப்படி நம்மளை கூப்பிடுறது வாடிக்கைதானே; ஏன் இப்போ கொஞ்ச நாளா நீ 'டென்ஷன்' ஆகுறே? இல்ல... காமராஜர் காலத்து கல்வியை படிச்சு வந்த மனுஷங்களுக்கு நல்ல பேச்சு எது, நல்ல எழுத்து எதுன்னு புரிஞ்சது.

சிறப்பான எழுத்துக்கும் பேச்சுக்கும் மயங்கி, அப்படி பேசி எழுதுனவங்களை தலைவர்களாக்கி மாலை போட்டாங்க! புரியுது... அதுக்கப்புறம் புகுத்தப்பட்ட கல்வி, கோர்வையா பேசக்கூட தெரியாதவங்களை தலைவர்களா ஏத்துக்கிட்டு கொண்டாட வைச்சிருக்குன்னு வருத்தப்படுறே; இப்படியான ஆட்கள் நம்மளை 'வாத்து...'ன்னு கூப்பிடுறதுல உனக்கு கோபம்!

பின்னே என்ன... நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கின மாணவர்கள் நடிகரை நாடாள கூப்பிடுறதும், மேடையில பிள்ளைங்க அப்படி கூப்பிடுறதை பெத்தவங்க பூரிச்சு பார்க்குறதும்... என்ன கன்றாவி இது!

ப்ப்ச்ச்ச்... 'இப்படியான மாணவ சமுதாயத்தை உருவாக்கி தந்திருக்கிற கல்வி தரமான கல்வியா'ன்னு கேட்காதவன் நம்மளை 'வாத்து...'ன்னு கூப்பிடுறான்; என்ன பண்றது... சினிமா மேல மக்களுக்கு இருக்குற மோகம் அப்படி! இந்தா, கூலி வரப்போகுது; ரஜினி இனி நிறைய கருத்து சொல்வார்!

ஆங்... இந்த ரஜினிகிட்டே, '1989 டிசம்பர் 14 - சென்னையில உங்க ராகவேந்திரா மண்டப திறப்பு விழா அன்னைக்கு, 'இந்த மண்டபத்துல வர்ற வருமானத்தால ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் 100 ஏழைகளுக்கு திருமணம் பண்ணி வைப்பேன்'னு சொன்னீங்களே... அது என்ன ஆச்சு'ன்னு யாராவது கேட்கணும்!

ம்ஹும்... அப்படி நினைவூட்டுற ஆளுகளா இருந்தா, 'எங்க கருணாநிதி உருவாக்கின கட்சி'ன்னு சமீபத்துல தி.மு.க.,வை துணை முதல்வர் உதயநிதி புகழ்ந்தப்போ, 'அண்ணாதுரை உருவாக்கின கட்சிதானே தி.மு.க.,'ன்னு கேட்டிருப்பாங்களே!

இப்போ சொல்லு; 'வாத்து...'ன்னு இவனுங்க என்னை கூப்பிடுறப்போ எனக்கு 'டென்ஷன்' ஆகுமா... ஆகாதா?






      Dinamalar
      Follow us