PUBLISHED ON : செப் 21, 2025

செய்தி: பெண் குழந்தைகளின் நலனுக் கான திட்டம்... முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்!
அநீதி: விதிப்படி 18 வயது பூர்த்தியாகியும் 'முதிர்வு தொகை' தராமல் 34 மாதங்களாக அலைக்கழிப்பு!
அரசே... தேனி மாவட்டம், பெரியகுளம், கீழவடகரையைச் சேர்ந்த நான் 21 வயதை நெருங்கும் செரினா பிரின்ஸி; தனியொரு பெண்ணாக என்னை வளர்ப்பவர் என் தாய் ஹேமாவதி!
'முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்' விதிகளின்படி, முதிர்வு தொகைக் காக, 1.2.2007 தேதியிட்ட, வைப்புத்தொகை உறுதிப்பத்திர எண்: C000319529 மூலம், மே 11, 2023ல் சமூகநலத் துறையில் நான் விண்ணப்பித்தேன்.
ஜனவரி 2025 வரை, 'கூடிய விரைவில் வரவாகி விடும்' என்றே பதில் வந்தது; பிப்ரவரி 2025ல், 'பெயர் பிழையாக பதிவாகி இருக்கிறது; திருத்தம் செய்ய வேண்டும்' என்றார்கள்; இப்போதோ, 'எதிர்வரும் தேர்தலுக்குள் பணம் வரவாகி விடும்' என்கிறார்கள்!
அரசே... வீட்டு வாடகை செலுத்த வழியில்லாத பொருளாதார சூழல் என்னுடையது; மிகுந்த சிரமத்திற்கு இடையில் திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லுாரி யில் முதுகலை படிப் பில் சேர்ந்திருக்கி றேன். 'பெண் குழந் தைகளது உயர் கல்விக்கு இத்திட்டம் உதவும்' என்றுதானே இத்திட்டம் பரப்பப்பட்டது?
இந்த அறிவிப்பில் உண்மை உண்டெனில், என் மேற்படிப்புக்கு உதவும் வகையில் உடனடியாக 'முதிர்வு தொகை' கிடைக்கச் செய்வாயா?

