
'ராகவேந்திரா டிரஸ்ட் ஒன்று ஏற்படுத்தி திறமையான மாணவர் களின் மேற்படிப்புக்கு உதவி செய்வேன்' என்று 1989ம் ஆண்டு உறுதியளித்த ரஜினிகாந்திடம் பதில் கேட்கிறது தமிழகம்!
01. 'இந்த இடத்திற்கு நான் பொருத்தமானவனா' என சமீபத்திய மேடையில் உரசிப் பார்ப் பது போல் 'இமேஜ்' உயர்த்திக் கொண்ட வரே... சொல்லுங்கள்; ' கூலி ' க்கு கூட விருக்கும் கூட்டத்திற்கு காரணம் ரஜினியா... லோகேஷா?
02. கபாலி யின் தோல்வியை புரிந்து கொண்டதாக 2016ல் அழுத்திச் சொன்ன கவிஞர் வைரமுத்து வோடு, 2024ல் நீங்கள் 80 நிமிடம் உரையாடிய தாக அவர் சொல்லியிருந்தார்; கவிஞரது 'குறள் உரை' படைப்புக்கு வாழ்த்தினீர்களா?
03. தமிழக முதல்வர் முன்னிலையில் 'ஓல்டு ஸ்டூடன்ட்' குறித்து எப்போதோ பேசியதற்கு இப்போது விளக்கம் ஏன் ரஜினி; இன்றைய விளக்கத்தை அன்றே ஒரு வீடியோவாக வெளி யிட்டிருக் கலாமே; ஆக... இதுவும் 'கூலி' க்காகவா?
04. 'சிஸ்டம் சரியில்லை' என்று அதை மாற்ற களம் காண்ப தாகச் சொல்லி பின்வாங்கி யவர் நீங்கள்; நாளை த.வெ. க., தலைவர் ஜோசப் விஜய் அதிகாரத்திற்கு வந்தால் திரைத்துறையை புனித மாக்க நீங்கள் தரும் முதல் அறிவுரை என்ன?
05. ஜூலை 14, 1995ல் பாட்ஷா வெள்ளிவிழா மேடையில், 'தமிழகத்தில் வெடிகுண்டு கலா சாரம் பரவியுள்ளது' என்றீர்கள்; தற்போது தமிழகத்தில் பரவியுள்ள கலாசாரம் என்ன என்பதை 'கூலி' மேடையில் அறிவிப்பீர்களா ?
06. முத்தான கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்த நீங்கள், உங்களை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழர்களின் பணத்திற்கு மதிப்பு தரும் படைப்புகளில் தற்போது நடிப்பதாக நம்புகிறீர்களா?
07. 'வரக்கூடிய நாட்களில் வெளியாகும் உங்களது அரசியல் கருத்து, தனிப்பட்ட புகைப்படம், மக்கள் மீதான அக்கறை எதுவாயினும் அது 'கூலி ' க்கான விளம் பரம்' என்று தமிழகம் சொல்லுமே... அது சரியான கணிப்புதானா?
7½ நடிகனை 'தலைவன்' எனச் சொல்லும் தமிழன் பற்றி...?