
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' எனச் சுற்றிவரும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியிடம், 'உமது நோக்கம் எம்மை சிந்திக்க வைப்பதெனில், ஏன் இப்படியெல்லாம் கேள்விகள் எழுப்பவில்லை' என்கிறது தமிழகம்!
1. அப்பாவின் கைப்பிடித்து அரசியல் பயின்று, அவர் இடத்திற்கு வர ஆசைப்பட்டு, அதையும் போராடியே பெற்ற நபரும்... அரசியல் உலகம் 'அடேங்கப்பா...' என்று ஆச்சரியப்படும்படி உயர்ந்தவரும் எந்த வகையில் சமம்?
2. முதல்வராக இருந்த என் மீதும் அமைச் சர்கள் மீதும் 2020 டிசம்பர் மாதம், 97 பக்க ஊழல் புகாரை கவர்னரிடம் அளித்தவர் மு.க.ஸ்டாலின். அவர் முதல்வராகி நான்கு ஆண்டுகள் கடந்தும் நாங்கள் ஏன் இன்னும் தண்டிக்கப் படவில்லை?
3. 'இதற்காகவும் வந்தேன் - இதற்காகவே வந் தேன்' என்பதற்கான வித்தியாசத்தில் தான் 'மரியாதை' ஒளிந்திருக்கிறது எனில், 'முதலீடு ஈர்க்கும் பயணம் - ஈ.வெ.ரா., படத்திறப்பு நிகழ்வு' இவற்றில் நீங்கள் 'கண்டுபிடித்தது' என்ன?
4. 'பாலியல் வன்கொடுமையை சமூ கம் தட்டிக் கேட்பதே இல்லை' என்று 2020ல் சென்னை, வண்ணாரப் பேட்டை சிறுமி விவகாரத்தில் வருந்தியவர் மு.க. ஸ்டாலின்; இன்று, அவர் திருப்தியுறும் வகையில் சிந்திக்கிறாயா சமூகமே?
5. 'கறுப்பு பணத்தை ஊதியமாக பெறாத ஓரிரு நடிகர்களில் நானும் ஒருவன்' என்று நேர்மை பேசிய நடிகர் கமலுடன் கைகோர்த்திருக்கும் நம் முதல்வர், திரைத் துறையின் கறுப்பு பண ஒழிப்பிற்கு கமலிடம் உதவி கேட்டிருப்பாரா?
6. சென்னையில் மழைநீர் தேங்கிய 2021 - 23ல் உருட்டிய காரணம்... முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் அவலம்; 2024ல் உருட்டிய காரணம் மெட்ரோ ரயில் பணி; 2025ல்... மேக வெடிப்பு; ம்ம்ம்... என்ன புரிந்து கொண்டீர்கள்?
7. 'எங்களைச் சந்திக்க இப்போது நீங்கள் வர, 'தேர்தல்' தவிர்த்து ஒரு காரணம் சொல் லுங்கள்' என என்னிடம் யாருமே கேட்காத நிலையில், 'தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது' எனும் தி.மு.க., வினரின் பேச்சு சிரிப்பூட்டுகிறதா?
7 ½ 'நான்காண்டு உறக்கம்' பலன் தருமா?