sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!

சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!

சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!


PUBLISHED ON : பிப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வேண்டுதல்களுக்காக மட்டுமல்ல குலதெய்வ வழிபாடு; அது, உறவுகள் ஒன்றிணையும் உணர்வுப் பூர்வமான கொண்டாட்டம்' என்கின்றனர், ராமநாதபுரம் கமுதியை அடுத்த அகத்தாரிருப்பு மற்றும் சுற்றுவட்டார 56 கிராமத்தினர்!

விருதுநகர் மா வட்டத்திலுள்ள தங்கள் குல தெய்வங்களான கூடமுடைய அய்யனார், பொன் இருளப்பன், வீரமாகாளியை தரிசிக்க, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் 100 கி.மீ., மாட்டு வண்டிகளில் பயணிக்கின்றனர்.

என்ன தருகிறது இந்த பயணம்?

'ராத்திரி நேரம்; 'வானம்தான் கூரை, மண்தரை தான் வீடு'ன்னு சொந்த பந்தங்களோட சமைச்சு சாப்பிட்டு பேசி, களைச்சு உறங்குற சுகத்தை என்னன்னு நான் வார்த்தைகள்ல சொல்றது' - தன் அனு பவம் சொல்லத் துவங்கினார் அகத்தாரிருப்பைச் சேர்ந்த 62 வயது கண்ணன்!

'என் குலதெய்வம் சந்தைவழி முனீஸ்வரன்; என் அம்மா, மனைவி எல்லாம் கூட முடையார் வகையறா! எனக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. 'குடும்பமா போற இந்த கூட்டத்துல என் மகளும் இருந்தா எப்படி இருக்கும்'னு ஆசைப்பட்டிருக்கேன். என் ஆசைப்படியே பொன் இருளப்பனை வழிபடுற வகை யறாவுல மாப்பிள்ளை அமைஞ்சது!

'என் பேரன் மாதிரியான அடுத்த தலைமுறைக்கு குல தெய்வத்தோட மகிமையையும், உறவோட மகத்துவத்தையும் புரிய வைக்குது இந்த பயணம்!'

மூன்று இரவுகள், மூன்று பகல்

'இங்க இருந்து வரிசைகட்டி போற எல்லா வண்டிகளும் சிவகாசி பக்கத்துல அர்ஜூனா ஆத்தங்கரையோரம் அவங்கவங்க குலதெய்வத்தைப் பார்க்க பிரியும்!

'நானும் என் மூத்த மருமகளும் கூடமுடையார் வகையறாங்கிற தால, அவங்கவங்க சின்ன வயசு ஞாபகங்களை பேசிக்கிட்டே போவோம். மூணு வருஷம் சேர்ந்து பயணம் பண்ணியாச்சு; இன்னும் தீரலை எங்க கதை' எனச் சொல்லும் கண்ணனின் மனைவி வரலட்சுமியின் கண்களில், 2027ம் ஆண்டு பயணத்திற்கான ஏக்கம்!

வைகாசி மா த பயணத்திற்கு தை மாதத்தில் இருந்தே தயாரிப்பு ஆரம்பமாகி விடுகிறது. 2023 பயணத்தின் போது, 200 மாட்டு வண்டிகளில் 550 குடும்பத்தினர் பயணம் செய்திருக்கின்றனர்.

'என்னதான் பஞ்சகாலத்துல சொந்த மண்ணை விட்டுட்டு அகத்தாரிருப்புக்கு எங்களோட முன்னோர் கள் வந்திருந்தாலும் அவங்களோட மூச்சுக்காத்தும் காலடித் தடங்களும் இன்னும் அங்கதான் இருக்கும்'ங்கிறது எங்க நம்பிக்கை!

'ஒவ்வொருவிதமா வாழ்ந்துட்டு இருக்குற எங்க எல்லாரையும் ஒரேவிதமா வாழ வைக்கிறது இந்த மாட்டுவண்டி பயணமும், இந்த குலதெய்வ வழி பாடும்தான்! அதனாலதான் காசு, காருன்னு வசதி வாய்ப்புகள் நிறைய வந்தாலும் மாட்டு வண்டிகளையும் விடாம இருக்குறோம்' என்கிறார் கண்ணனின் அண்ணன் மகனான 52 வயது திருச்செல்வம்.

திருச்செல்வத்தின் இந்த உணர்வை இப்படியும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்...

எம்முன்னோர் வந்த வழித்தடம்; நானும் வந்து செல்லும் வழித்தடம்; என் தலை முறையும் வந் துசேரும் வழித்தடம்; ஆம்... இது, என் குல தெய்வ கோவில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us