PUBLISHED ON : பிப் 02, 2025

திருவண்ணாமலை தண்டராம்பட்டின் தானிப்பாடி - பண்டாரம் மலையடிவார பாதையில், தென்பெண்ணை ஆற்றின் தென்பகுதியில், வயல்கள் சூழ்ந்திருக்கும் தா.மோட்டூர் கிராம மக்களுக்கு இது... கூத்தாண்டவர்!
வரலாறு: 10 செ.மீ., தடிமன்; 3.25 மீட்டர் உயர, அகலம்; இச்சிலையை, '3,000 ஆண்டுகள் தொன்மையான தாய் தெய்வக்கல்; தமிழகத்தின் முதல் வழிபாட்டுச் சிலை' என பி.நரசிம்மைய்யா உள்ளிட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துவதாக சொல்கிறார் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இச்சிலை பற்றிய பின்னணி கதைகள்...
பழங்கதை 1: 'வாலியர்'னு சொல்லப்படுற குள்ளர்கள் எலி, முயல் வைச்சு நிலத்தை உழுதப்போ நெருப்பு மழை பெய்ய, காப்பாத்த சொல்லி தாய் தெய்வத்துக்கிட்டே அவங்க மண்டியிட, தெய்வம் மனமிரங்காம இருக்க, கோபத்துல சிலையோட தலையை வெட்டிட்டாங்க!
பழங்கதை 2: ஒரு வறட்சி நேரத்துல ஊரை விட்டு வெளியேற கூத்தாண்டவர் மறுக்க, கோபப்பட்ட மக்கள் கத்தி வீச, சிலையோட தலை இப்போதைய விழுப்புரம் கூவாகத்துல விழுந்திருச்சு! ஆண்டுக்கொரு முறை இந்த கூத்தாண்டவருக்கு திருவிழா; அன்று, வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் அபிஷேகம் நடக்கும்.