
சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்; கலை கொஞ்சும் மகா மண்டப கல்துாண்கள்; கைதொழ வைக்கும் கவின் மிகு சிற்பங்கள்! மூலவர் கைலாசநாதரின் முன்நின்றபடி மகாமண்டப கூரையைப் பார்த்தால், சுற்றிச்சுழலும் தன்மையுடன் மடல்கள் விரித்து சிரிக்கும் தாமரை!
7x7 அளவு கொண்ட சதுர கல்லின் மையத்தில் அழகுற செதுக்கப்பட்டிருக்கும் தாமரை இதழ்களை, எட்டு திசைகளிலும் இருந்து எட்டு கிளிகள் கொத்துவது போல் சிற்பியின் கற்பனை; 'கிளிகள் மலரிதழ்களின் நுனியில் தொங்குகின்றனவோ' என பார்ப் போரை யோசிக்க வைக்கும் கலைநயம்!
மலரைச் சுற்றிலும் அன்னப்பறவை களின் அணிவகுப்பு. அடுத்த வரிசையில், தத்தமது வாகனங்களில் எட்டு திசைகளை நோக்கும் 'அஷ்டதிக்' பாலகர்கள்; அருகில் பணிப்பெண்கள்! உள், வெளி சதுரங்களின் அனைத்து முனைகளிலும் கல் சங்கிலிகள்!
'பசு ஒன்று தினமும் பால் வார்த்த புற்றில் சிவலிங்கம் தென்பட, மன்னர் கள் கட்டி எழுப்பியது இக்கோவில்' எனும் வரலாறு சொல்லும் பச்சைக்கந்த சுவாமி கள் மடத்தின் புலவர் வீ.வீரமணி, 'அழுக்கு படிந்திருக்கும் இச்சிற்பம் பராமரிக்கப்பட வேண்டும்' என்று வேண்டுகிறார்.
கோவில் பணிக்கு வரும் சிற்பிகள், 'அந்த நான்கு கோவில்களின் சிற் பங்களை நாங்கள் செதுக்குவதோடு ஒப்பிடக் கூடாது' என்று மன்னர்களி டம் வேண்டுகோள் வைப்பது வழக்க மாம்; அத்தகைய பெருமை வாய்ந்த நான்கில் ஒன்று இது!

