PUBLISHED ON : ஏப் 05, 2026

கும்பகோணம், கோவிலாச்சேரி அன்னை இயற்கை மருத்துவக் கல்லுாரி மாணவியரான
இவர்கள், அரசியல் களத்திலும் வெள்ளித் திரையிலும் தங்கள் வழிகாட்டிகளைத்
தேடவில்லை; பிறகு.
'தனுஷியா - என் பெரியம்மா மகள்; சோழபுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2வில் 951 மதிப்பெண்; பகுதிநேர வேலை பார்த்தபடி செவிலியர் படிப்பு; கும்பகோணம் அரசு மருத்துவமனை செவிலியாக மூன்று ஆண்டுகள் பணி; தற்போது, ஐதராபாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியாக ஜொலிக்கிறார்; வறுமையை வென்று வாழ்வில் ஜெயித்த இவரே என் வழிகாட்டி!'
அ.திவ்யா
'ஆளுமைமிக்க அரசனாக, போர்த் திறன் கொண்ட வீரனாக, அறநெறி பின்பற்றிய இறைபக்தனாக வாழ்ந்த ராஜராஜ சோழன்; இந்த மாமன்னனின் பன்முகத்திறனை தேடித்தேடி படித்து பரவசம் அடைந்தேன். கல்வியோடு தடகளம், ருத்ர தாண்டவம் என விளையாட்டிலும் கலையிலும் இன்று நான் சிறந்து நிற்க, அருள்மொழி வர்மன் எனும் இயற்பெயர் கொண்ட இந்த ராஜராஜனின் ஆளுமையே காரணம்!'
இரா.கா.குறளமுது
'நாமும் நன்றாக படிக்க வேண்டும்; மதிப்பெண்கள் குவிக்க வேண்டும்; மேடையில் பேச வேண்டும்; நன்மதிப்பு பெற வேண்டும்; துணிச்சலும், தன்னம்பிக்கையும் கைகொள்ள வேண்டும் எனும் என் ஆசைகளுக்கு காரணமான என் சகோதரி ராஜஸ்ரீ. எங்கள் ஊரின் முதல் அரசு அதிகாரி; தற்போது அஞ்சல் துறையில் பணியாற்றுகிறாள்; இவளைத்தவிர ஏது எனக்கு பெரு வெளிச்சம்!'
ர.வஜிரா தேவி
