sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

/

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்


PUBLISHED ON : ஏப் 06, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாத்தாக்கள், பாட்டிகள் கதை சொல்லிய பொற்காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது!

கடந்தாண்டு இளநிலை பட்டம் பெற்ற கையோடு சென்னை 'அஸினோவேஷன்' நிறுவனத்தில் பயிற்சியும், பணிவாய்ப்பும் பெற்று, தமிழக கல்லுாரிகளில் 'கதைசொல்லி'களாக செயலாற்றும் 'ஜென் இசட்' பறவைகளின் குரல்கள்...

நான் ஏன் 'கதை சொல்லி' ஆனேன்?

'பிடித்ததை செய்யவும், சிறகடிக்கத் தயங்கும் என் சிறகுகளுக்கு தன்னம்பிக்கை தரவும் விரும்பினேன்!' - சி.தனவந்தினி, கடலுார்.

'எனது அனுபவ எல்லையை பெரிதாக்கவும், கற்பனை திறனால் மாணவர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தவும் ஆசைப்பட்டேன்!' - ரா.சரண்யா, பெரம்பலுார்.

'வாழ்வில் நான் உயர கனவு காண வைத்தவை கதைகள்தான்; நான் சொல்லும் கதைகளை கேட்கும் மனங்களில் கனவின் விதைகளை துாவி வளர்ப்பது என் இலக்கு!' - ம.மாலா, கடலுார்.

'புனைவுகளை காட்டிலும் சந்திக்கும் மக்களின் உணர்வுகள், நம்பிக்கைகளை உள்வாங்கி அதை கதைகளாக சொல்வதில் எனக்கு தீரா காதல்!' - ஜெ.ஜாய்ஸ், விழுப்புரம்.

'உளவியல் பட்டதாரி நான்; மனித மனங்களை நோட்டமிடும் வாய்ப்பு கதை சொல்லல் வழி கிடைப்பதாலும், என் 'ஈகோ' நொறுக்க சந்தர்ப்பங்கள் அமைவதாலும் இதில் இறங்கினேன்!' - ம.க.தினேஷ், கடலுார்.

அரசுப்பள்ளி, அரசு கல்லுாரியில் பயின்ற இந்த ஐவரும், 'நான் முதல்வன்' திட்டத்தில் 'கதை சொல்லல்' திறனை வளர்த்துக் கொண்டவர்கள்...

மாணவி டூ கதைசொல்லி' - தனவந்தினி தன்னுள் கண்ட மாற்றம்?

விமர்சனங்களை சந்திக்க அச்சப்பட்ட நான், 'இதெல்லாம் ஒரு வேலையா' என்று இப்போது யாரும் கேலி பேசினால் சிரித்தபடி கடந்து செல்கிறேன்!

சரண்யாவின் பெருமைமிகு தருணங்களில் ஒன்று...

'உலக கதை சொல்லல் - 2023' போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த தருணம். பெற்றோருக்கு என் மீது நம்பிக்கை வர இந்த வெற்றியே முக்கிய காரணம்!

மாலாவுக்கு இப்பணி கிடைக்காமல் போயிருந்தால்?

பெண் பார்க்கும் படலத்தில் காபி நீட்டும் நேரம் போக மீதமுள்ள நேரத்தை ஸ்மார்ட்போனில் கழித்திருப்பேன் அல்லது ஊறுகாய் தயாரிப்புக்கு தினக்கூலியாக போயிருப்பேன்!

ஜாய்ஸ்... உங்களின் சாதனை?

என் வருமானத்தை நம்பி என் குடும்பம் இருப்பினும் கலை மீதான என் பற்று குறைந்ததில்லை; கடந்த ஆறு மாதங்களில், 23 கல்லுாரிகளில் பல நுாறு மாணவ மாணவியரிடம் கதைகள் சொல்லி இருக்கிறேன்!



உங்க ஐந்து பேருக்கும் பொருத்தமாக ஒரு குறள் சொல்லுங்க தினேஷ்...


குறள்: 399

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்: தம் மனதை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு மேலும் கற்கவே கற்றறிந்தவர்கள் விரும்புவர்!






      Dinamalar
      Follow us