PUBLISHED ON : ஜூலை 27, 2025

'ரோடு ரோலர்' வேகத்தில் த்ரில்லர்!
முதல் காட்சியில் பொறியில் சிக்கிய எலியை தண்ணீரில் மூழ்கடிக்கிறார் ஒரு காவலர். மூச்சடங்கிய எலியை காவலர் துாக்கி எறிகையில் தாவி தப்பிக்கிறது எலி. மறதி நோயாளி வடிவேலு: அவரது பணத்தை திருட நினைக்கும் பகத் பாசில். நாகர்கோவில் - திருவண்ணாமலை - கோவை - இருசக்கர வாகன பயணத்தில் இவ்விருவரில் யார் எலி?
இவர் வடிவேலு அல்ல... பணி ஓய்வு பெற்ற, மனைவியை இழந்த, மகனது பாசம் கிடைக் காத வேலாயுதம் என்று நம்பும்படியாக இருக்கிறது. வைகைப்புயலின் அமைதியான நடிப்பு, தொண்டிமுதலும் த்ரிக்க்ஷாஷியும் படத்தில் எந்தவகை பாத்திரத்திற்காக பகத் பாசிலுக்கு 'தேசிய விருது' கிடைத்ததோ. இதிலும் அதே திருடன் வகையறா பாத்திரம்!
'ரோடு ஷோ' செல்பவர்களின் பார்வையில் இருந்து குறைகளை திரையிட்டு மறைப்பது போல, திரைக்கதையின் பலவீனத்தை மறைக்க முயல்கிறது வடிவேலு பகத் கூட்டணி. தன் மனைவிக்காக அழும்போதும். 'ஆஹா இன்ப நிலாவினிலே...' பாடலை பாடும் போதும் புதிய கோணத்தில் வடிவேலுவை ரசிக்க முடிகிறது!
'இதுவரை பார்த்தது அல்ல கதை' எனும் 'சஸ்பென்ஸ்' உடைக் கும் இடைவேளைக்குப் பின், இயக் குனர் சுதீஷ் சங்கர் புதிதாக எதுவும் சொல்லவில்லை. நிறைய இயக்கு னர்கள் கையில் எடுத்த பிரச்னை யைத் தான் இவரும் தேர்வு செய்திருக்கிறார். எல்லாவற் றிற்கும் 'லாஜிக்' விளக்கம் கொடுத்தாலும், 'த்ரில்லர்' கதைக் குரிய பண்புகளை அவரால் வழங்க முடியவில்லை!
நல்ல 'த்ரில்லர்' திரைக்கதை யின் பலம்... அதை மறுமுறை பார்க்கத் தூண்டுவதில் இருக் கிறது. மாரீசன்... ஒருமுறைக்கு மட்டுமே!
ஆக...
குருவி தலையில் பனங்காயாக இக்கதையின் மீது வடிவேலு - பகத் பாசில்!