PUBLISHED ON : செப் 07, 2025

உங்க யாருக்கெல்லாம் சாகணும்னு ஆசை?
படம் முழுக்க சிவகார்த்தி கேயனுக்கு சாகணும்னு ஆசை; அந்த ஆசையை கடைசி வரைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் நிறைவேத்தி வைக்காததால, 'நான் பைத்தியம் பிடிச்ச மாதிரி நடிக்கிறேன் பாரு'ன்னு நமக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறாப்ல!
'பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க் குற பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா, அவர் எந்த பைத்தி யத்துக்கு வைத்தியம் பார்க்குற பைத்தி யக்கார வைத்தியர்கிட்டே தன்னோட பைத்தி யத்துக்கு வைத்தியம் பார்த்துக்குவாரு'ன்னு எப்போவோ தமிழ் சினிமா சொன்ன வசனத்தை, அனிருத் சாமான் செட்டு உருட்ட லோட, இடைவிடாம இரண்டரை மணி நேரம் கேட்கப் பிடிக்கும்னா இது மிகச்சிறந்த படம்!
மனநிலை சரியில்லாத ஆளா சிவகார்த்தி கேயனை காமிக்க பிஜு மேனன், விக்ராந்த், வித்யூத் ஜம்வால்னு எல்லா பாத்திரங்களோட மூளைகளையும் 'ஆசிட்' ஊத்தி கழுவி இருக் காரு முருகதாஸ்! ஒவ்வொரு காட்சி முடியுற போதும், 'என்னா சிரிப்பு சிரிச்சீங்க... சாவுங் கடா 'ன்னு நம்ம பக்கத்து சீட்டுல உட் கார்ந்து அந்த கூலி கூவுற மாதிரியே இருக்குது!
'யாருமே அறியாத' காட் டுக்கு நடுவுல இருக்குற ரகசியமான என்.ஐ.ஏ., பங் களாவுக்கு, சிவகார்த்தி கேயன் 'ஓலா'வுல வந்து இறங்குறப்போ, மூளை கழுவுன அந்த 'ஆசிட்' நம்ம மூஞ்சி மேல தெறிக்குது!
அய்யோ சாமி... ' வட நாட்டுல இருந்து கன் டெய்னர்ல வர்ற துப்பாக் கிகள் தமிழர்கள் கையில கிடைச்சுடக் கூடா தாம்!' - இது கதை; இந்த கதைக்கு சிவகார்த்தி கேயனை வைச்சு வைத்தியம் நடந்திருக்கு!
'இப்படி படம் எடுத்து சம்பாதிக்கணுமா'ன் னும், 'இப்படி ஒரு படம் பார்த்து உசுரு வாழணுமா'ன்னும் இடைவிடாம யோசிக்க வைக்குது, ரத்த சகதியில ஈ மொய்க்குற திரைக்கதை.
ஆக...
பரவாயில்லை டாக்டர்... தொப்புளை சுற்றியே ஊசி போட்டு விடுங்கள்; ப்ளீஸ்... ப்ளீஸ்...