PUBLISHED ON : ஆக 03, 2025

'லால்' எனும் புழு கொண்ட துாண்டில்!
'கவுன்சிலர் முன்னாடி 'நீராரும் கடலுடுத்த...' பாடுறதுக்காக ஸ்கூல் பொண்ணு மேடையேறி வர்ற மாதிரி, ஒரு லேடி கான்ஸ்டபிள் சப் இன்ஸ்பெக்டர்கிட்டே வந்து, 'சார்... அந்த அம்மா டாய்லெட் போகணும்னு சொல்றாங்க சார்'னு வசனம் துப்புறப்போ, கண் சிமிட் டாம பார்த்தா ரெண்டு கண் ணுலேயும் பூ பூக்கும்... அப்படி ஒரு நடிப்பு!
' இந்த கூட்டத்துல வந்து லால் எப்படி சிக்குனாரு'ன்னு கடைசி வரைக்கும் நாம யோசிச்சு கலங்குற மாதிரி, அந்த மனுஷனை அப்படி வைச்சு செஞ்சிருக்காய்ங்க! வில்லன் கோஷ்டி அவரோட போலீஸ் யூனிபார்மை உருவி டவுசரோட நிற்க வைச்சிருக்கிறப்போ மனுஷன் அழுவுறாரு பாரு... 'நம்ம மைண்ட் வாய்ைஸ கேட்ச் பண்ணிட்டாரோ'ன்னு மனசு பதறுது!
பத்து கோடி ரூபாய்... அம்புட்டும் 500 ரூபா கட்டு... ஒத்தை கார் டயருக்குள்ளே திணிச்சுட முடியுமா; முடியும்! ஆள் நடமாட் டமே இல்லாத இடத்துல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இட்லி கடை போட்டிருந்தா எப்படி வியாபாரமாகும்; ஆகும்... 'ஹீரோ சரக்கடிச்சுட்டு வந்து நாலு இட்லி சாப்பிடு வாப்ல'ன்னு அவங்களுக்குத் தெரியும்!
இப்படி நிறைய கட்டுவிரியன்கள், 'க்ளைமாக்ஸ்' வரைக்கும் விஷம் கக்கிட்டு திரியுதுங்க! 'போலீஸ் ஸ்டேஷன்ல வைச்சு தொலைஞ்சு போன ஒரு துப்பாக்கியை கண்டுபிடிக்கிறேன்'னு சொல்லி கிளம்புன 'பார்வையற்ற' கதையோட கால்களை, டைரக் டர், கேமராமேன், மியூசிக் டைரக்டர் எல்லா ருமா சேர்ந்து ஒடிச்சுட்டு, 'இது நல்லா டான்ஸ் ஆடும்'னு 'டிரெய்லர்'ல நம்ப வைச்சிட்டாங்க!
அதைப் பார்த்துட்டு, 'என்னமோ இருக்கும் போல'ன்னு நம்பி வந்தவனுக்கு... சங்கு.
ஆக...
முந்தைய வாரம் வெளியானதை வெற்றிப் படமாக்கும் தமிழ் திரையுலக முயற்சிக்கு இவ்வாரம் வெற்றி!

