sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/நாங்க என்ன சொல்றோம்னா...: வித் லவ்

நாங்க என்ன சொல்றோம்னா...: வித் லவ்

நாங்க என்ன சொல்றோம்னா...: வித் லவ்


PUBLISHED ON : பிப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உருவம், குணம் வேறு; இன்னொரு ராம் - ஜானு

இடைவேளைக்குப் பின் ஒரு காட்சி; பள்ளிப் பருவத்தில் கலைந்து போன காதலை, கையிலும் வயிற்றிலும் குழந்தையுடன் இருக்கும் அப்பெண்ணிடம் இப்போது சொல்ல வேண்டும். இப்போதும் தைரியம் வராமல் எப்படி எல்லாமோ சொல்லும் அபிஷன் ஜீவிந்த், அவளுக்காக எப்போதோ தயாரித்த பரிசை கொடுக்கையில்...

ஷான் ரோல்டனின் குழலிசை நம் இதயத்தை ஊடுருவும் பாருங்கள்... அய்யோடா... வயது இருபதோ, அறுபதோ... காதலிப்பவரோ, காதலித்தவரோ... மனதை குளிப்பாட்டி துவட்டி முத்தமிடுகிறது காதல். ஜன்னல் திரை அசைவில் தேவதை தரிசனம் பார்த்தவன், அடுத்த திரை அசைவுக்காய் தவம் கிடப்பானே... இந்த காட்சிக்கு அடுத்து அப்படி காத்திருக்கிறது மனது. தேவதையாய் அனஸ்வர ராஜன்.

அழகு சிலையை ஆடை, ஆபரணங்கள் பேரழகாக்கு வது போல், அனஸ்வர ராஜனை பேரழகியாக்கி இருக்கிறது திரைக்கதை. அடுத்தடுத்த பக்கங்களில் திருப்பங்கள் நிறைத்து வைத்திருக்கும் அற்புதமான புத்தகம் போல், கலாட்டா செய்கையிலும், காதலில் தவிக்கையிலும், கண்ணீர் உதிர்க்கையிலும் நம் மனம் மீட்டும் இந்த அழகி, அபிஷன் போல் காலம் கடந்து தன்னவனிடம் காதல் சொல்வதைப் பார்க்கத் துடிக்கிறது மனம்.

இவ்விருவரும் அன்று அவரவர் நபர்களிடம் காதலை சொல்லாமல் இருந்த காரணம்... முன்கதை. இன்று சொல்வதும், விளைவுகளும் இடைவேளைக்கு பின்பான கதை. இருவருக்கும் மூன்று முடிச்சு போட துவங்கும் கதை, அதைச் செய்ததா என்பது க்ளைமாக்ஸ்.

டூரிஸ்ட் பேமிலி மூலம் தனக்கு மீண்டும் வெளிச்சம் தந்ததற்காக அதன் இயக்குனரும் இதன் நாயகனுமான அபிஷனுக்கு இதில் நன்றிக்கடன் தீர்க்கிறார் சசிகுமார்; இது, கதைக்கு சற்றும் தொடர்பில்லாத சிறு காட்சி எனினும் அப்படி இனிக்கிறது. 'அன்பின் மற்றொரு பெயர்தான் காதல்' என்றால், படம் முழுக்க திகட்டாமல் தித்திக்கிறது காதல்.

ஆக...

அழகு குழந்தையை கையில் அள்ளியதும் என்ன தோன்றும்; அதேதான்... இச்ச்ச்ச்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us