PUBLISHED ON : ஆக 17, 2025

வீட்டு பெரியவர் அதாவது அந்த '1950 மாடல்' என்ன பண்றாருன்னா, அக்கம்பக்கத்துல இருந்து தன்னை அண்ணாந்து பார்க்குறதா தான் நம்புற எல்லாரையும் வீட்டு விசே ஷத்துக்கு கூப்பிடணும்னு நினைக் கிறாரு. 'விசேஷத்தை நான் நடத்திக் கொடுக்குறேன்'னு லோகேஷ் ஜாடையில ஒரு பையன் வந்து நிற்கிறான்; அவனே போய் எல்லாரையும் கூட்டிக்கிட்டும் வர்றான்.
நாகார்ஜூனா சாயல்ல வர்ற ஆளு பெரியவருக்கு தம்பி முறை; 'கொடிக்குளம் பேச்சிக்கும் தனக்கும் என்ன கசமுசா'ன்னு ரஜினிமுரு கன் ல ராஜ்கிரண் மூக்கொழுகிட்டே நீளமா பேசுற மாதிரி, வந்த மனுஷனை உட்கார வைச்சு ஒரு பழைய கதையை கொழகொழ ன்னு பெரியவர் கரைச்சு ஊத்த ... அந்தாளு காலி!
அடுத்து உபேந்திரா சாயல்ல ஒரு ஆளு; ஆயிரம்தான் ஆனாலும் தான் பிறந்து வளர்ந்த ஊர்க்காரர்ங்கிற பாசத்துல, அந்தாளுக்கு பெரியவர் சங்கு ஊதலை; கூடமாட ஒத்தாசைக்கு வைச்சிக்கிறாப்ல!
அப்புறம் சவுபின் ஷாஹிர் ஜாடையில ஒரு மனுஷன்; இந்தாளு துாரத்து உறவுன்னாலும் பெரியவருக்கு ஆகாது; ஏன்னா, பெரியவர் கூட ஆரம்ப பாடசாலையில படிச்சவனை இவன் கொன்னுட்டான். அதனால, 'பழி தீர்க்குறேன்'னு அப்படி இப்படி விரலை ஆட்டி, நாலு பேருக்கு போனை போட்டு, பெரிய குழியா தோண்டி வந்தவனை முடிச்சிடுறாரு!
இதுக்கு நடுவுல பெரியவருக்கு குஷி மூடு வர்றப்போ எல்லாம், அனிருத் குரல்ல அலறி 'டான்ஸ்'னு என்னென்னமோ வித்தை காமிக்கி றாப்ல; 'எதைப் போட்டாலும் சாப்பிடணும்'னு வந்தவனுங்க, 'பிரமாதமா ஆடுறீங்க பெரிய வரே'ன்னு கைதட்டுறானுங்க!
இதை கலாநிதிமாறன் சாயல்ல இருக்குற ஒரு ஆள் பார்த்து, 'என்னா ஒரு உழைப்பு'ன்னு கொளுத்திப் போட்டதால, நாலு நாள்... செம கல்லா கட்டிரு ச்சு விசேஷ வீடு.
இப்படி ஆரம்பிக்கலாம்... ஒரு விசேஷ வீடு!
ஆக...
கே.பாலசந்தர் ஆரம்பித்து வைத்த வாழ்க்கை யார் யாரோவால் முடித்து வைக்கப்படுகிறது!