
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விடிஞ்சா வெயில் வாட்டுது. சாய்ந்தரம் ஆகிட்டா, சில்லுனு காத்தோட, துாறலும் விழுறதால குளுருது. இந்த கிளைமேட்ல, துாக்கமே வராம, உங்க பப்பி அவதிப்படுதா. உடனே கிளம்பி, இதெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க.
'பப்பி காட்': குளிருக்கு இதமா துாங்குறதுக்கு, 'பப்பி காட்' இருக்குது.ஆன்லைன்லயும்,நிறைய மாடல்ல, ஆபர் விலையிலகிடைக்குது.சாப்ட் காட்டன்ல,போர்வை மாதிரி மேல மூடுற வசதியோடஇருக்கறதால,இதுக்குள்ளபோய்படுத்துக்கிட்டா, உங்களுக்கு குட் நைட் சொல்லிட்டு, பப்பி ஸ்வீட் ட்ரீம்ஸ்ல மூழ்கிடும்.
பப்பி சாக்ஸ்: பகல் நேரத்துலமழை பெய்யும் போது, பப்பி நனையக்கூடாது. அதோட பாதத்துல தண்ணீர் தேங்குனா, இன்பெக் ஷன் ஆகிடும். இதுக்குன்னு பப்பி சாக்ஸ் கடைகள்ல கிடைக்குது. எலாஸ்டிக் டைப்ல, எல்லா சைஸ்லயும் இருக்கறதால, வாங்கி மாட்டிவிட்டுருங்க.