sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

'சண்டே'னா ரன் டே!

/

'சண்டே'னா ரன் டே!

'சண்டே'னா ரன் டே!

'சண்டே'னா ரன் டே!


UPDATED : ஜூலை 14, 2024 10:16 PM

ADDED : ஜூலை 13, 2024 10:32 AM

Google News

UPDATED : ஜூலை 14, 2024 10:16 PM ADDED : ஜூலை 13, 2024 10:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு குதிரை வளர்த்துப்பார்! குழந்தைப்பருவம் எட்டிப்பார்க்கும். குட்டிச்சுவரில் குதித்தது நினைவுக்கு வரும். உயரத்தில் உட்கார்ந்து ஊர் பார்க்கலாம். என, வைரமுத்து லெவலுக்கு, தன் குதிரை பற்றி சிலாகித்தார், கோவை, வெள்ளானைப்பட்டியை சேர்ந்த மனோஜ்.அவர் நம்மிடம் பகிர்ந்தவை:

மாடு, ஆடு, சேவல், கோழி, நாய்-னு நிறைய பெட்ஸ் இருக்கு. ஆனா, குதிரை மேல தான் எனக்கு இஷ்டம். அதுவும், கத்தியவாரி (நாயகி) ப்ரீட் தான் வேணும்னு, தேடி போய் வாங்குனேன். இந்த ப்ரீடோட காது, வித்தியாசமா வளைஞ்சிருக்கும். இதுக்கு ஐஞ்சு வயசா இருக்கும் போது வாங்குனேன். இப்போ வீட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆகிடுச்சு.

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டா, நாயகிய கையிலயே புடிக்க முடியாது. அதுமேல ஏறி உட்கார்ந்து, எவ்ளோ துாரம் ரெய்டு போவோம்னு தெரியாத அளவுக்கு ஜாலியா சுத்துவோம். இவ தனியா இருக்கறதால, ஒரு நாட்டுக்குதிரையும் வாங்கியிருக்கேன். இது ரெண்டும் ரொம்ப ப்ரெண்ட்லி.

தோட்டத்துக்குள்ள வீடு இருக்கறதால குதிரையை கட்டி வைக்க மாட்டோம். கமர்ஷியல் புட் விட, பச்சை புல் தான் விரும்பி சாப்பிடும்.மேய்ச்சலுக்கு போயிட்டு, வயிறு நெறைஞ்சதும், அதோட கொட்டகையில வந்து ரெஸ்ட் எடுத்துக்கும்.

புது ஆட்களை பார்த்தா சீறாது. கிட்ஸோட ரொம்ப அட்டாச் ஆகும். என் அக்கா பையன் ஆதிரனுக்கு ஏழு வயசுதான் ஆகுது. நாயகி மேல அவன் ஏறி உட்கார்ந்தா பயமுறுத்தாமா, ஸ்லோவா நடக்கும். யாரா இருந்தாலும், நாயகி மேல ஏறி உட்கார்ந்துட்டா, அவங்க மனநிலைக்கு ஏத்தமாதிரி தான், லெக்ஸ மூவ் பண்ணும். அந்த அளவுக்கு குட் கேர்ள்.

இவ வீட்டுக்கு வந்தபிறகு, வெளியூருக்கு போறதே இல்ல. கொஞ்சம் நேரம் இல்லாட்டியும், வீட்டையே எட்டி பார்த்துட்டு காத்திருக்கும். என்னோட பைக் சத்தம் கேட்டா, கொட்டகையிலஇருந்துக்கிட்டே கனைக்கும். இவளை பார்த்துட்டு தான், வீட்டுக்குள்ளயே நுழைவேன். ரொம்ப எனர்ஜிட்டிக்கா இருக்கறதோட, பாசிட்டிவ் வைப் தர்றதால, நாயகி மேல இருக்கற கிரேஸ், நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்கு. 'நாயகி'ங்கறதால வார்த்தை அருவியா கொட்டுது போல!

வீட்டிலேயே 'குரூமிங்': மதன் 'டிப்ஸ்'

''உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா... வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா''-னு பீல் பண்ணி பாடுற அளவுக்கு குரூமிங் முடிஞ்சதும், ஷைனிங்கா பொம்மை மாதிரி, அழகா மாறிடுச்சு ஒரு பூடில்.

சோசியல் மீடியால பார்த்த, அந்த வீடியோவோட புரொபைல்ல, அட்ரஸ் தேடி நாங்க சென்ற இடம், கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்த, 'பா டிரண்ட்ஸ்'. அதன் உரிமையாளர் மதனுடன் ஓர் சந்திப்பு: 'குரூமிங் ஸ்பா'க்கு செலவு பண்றது அவசியமா, ஆடம்பரமா?

நம்மை அழகுப்படுத்திக்கறதுக்கு பார்லர் போற மாதிரி தான் பெட்ஸ சுத்தப்படுத்தி, அழகுப்படுத்துறதுக்கு குரூமிங் ஸ்பா இருக்குது. பிசினஸ், ஒர்க்-னு பிசியா இருக்கறவங்க, பெட்ஸோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. இதை குளிப்பாட்டாம, ஹேர்கட் பண்ணாம இருந்தா, ஹெல்தியான குரோத் இருக்காது. பப்பியோட நகத்தோட சேர்ந்து நரம்பும் வளரும். இதை தெரியாம வெட்டிட்டா, ரத்தம் கொட்டும். புரொபஷனல்லான குரூமரை தேர்ந்தெடுக்கலைன்னா, உங்க பப்பி, கத்திரிக்கோல் பார்த்ததும் கத்தி ஆக்ரோஷமாகிவிடும்.

புரொபஷனல் குரூமர்னு எப்படி தெரிஞ்சிக்கறது?. குரூமிங் கோர்ஸ் சேர்ந்து, முறையா டிரெயினிங் எடுத்தவங்க, ஹைப்பரா இருக்கற பப்பியையும், ஈஸியா ஹேண்டில் பண்ணிடுவாங்க. குரூமிங் முடிஞ்சதும், உங்க பப்பி ஜாலியா பீல் பண்ணும். சிலகுரூமர்கிட்ட,பப்பி ஒத்துழைக்கலைன்னா, ஹேர்கட் பண்ணும் போது, ஸ்கின் டேமேஜ் ஆகிடும். அப்புறம் பப்பி, ஒழுங்கா சாப்பிடாம, துாங்காம அவதிப்படும்.

இந்த எக்ஸ்பீரியன்ஸ் எனக்கும் ஏற்பட்டதால தான், பெங்களூருல, குரூமிங் கோர்ஸ் சேர்ந்து படிச்சேன். என்னோட ஒர்க்கிங் ஸ்டைல் புடிச்சதால தான், ஸ்பா தொடங்குன 2 வருஷத்துல, 3,000 ஹாப்பி கஸ்டமர்ஸ் கிடைச்சிருக்காங்க. ஸ்பா போக முடியாதவங்க, வீட்டுலயும் குரூமிங் பண்ணலாம். வீட்டுல பண்ணக்கூடிய பேசிக் குரூமிங் என்ன?

ஹேரி ப்ரீட்ஸ் வாங்குனா, டெய்லி சீவிவிடணும். ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை குளிப்பாட்டுறது, நகம் வெட்டுறது, காது, கண் சுத்தப்படுத்தறது அவசியம்.

தேங்காய் எண்ணெய் வச்சி, பப்பிக்கு மசாஜ் செய்யணும். பப்பியோட ஸ்கின்ன தொட்டா தான், அலர்ஜி, பொடுகு இருக்குதா, பூச்சி, ஒட்டுண்ணியால பாதிக்கப்பட்டு இருக்கான்னுதெரியும்.

பப்பியோட பாதத்தை சுத்தமா வச்சிருக்கறது அவசியம். அதுல தண்ணீர் தேங்கிட்டா, பூஞ்சை, பாக்டீரியா தொற்று ஏற்படலாம். பாதத்துல வெடிப்பு வந்துட்டா, நடக்கவே முடியாம சிரமப்படும். இந்த மாதிரியான சூழல்ல, டாக்டர் அட்வைஸ் ரொம்ப முக்கியம்.

இன்றும், நாளையும் கோவையில் 'பூச் பார்ட்டி'!

இந்த வீக் எண்டுல, உங்களோட சேர்ந்து, உங்க பப்பியும் ஜாலியா, பன்புல்லா என்ஜாய் பண்றதுக்காக, 'லே ஷீரோ' நிறுவனம், கோவை, மாதம்பட், சி.எஸ்.ஆர்., ரெசார்ட்ல, இன்னைக்கும், நாளைக்கும் (ஜூலை 13,14), பூச் பார்ட்டி நடத்துறாங்க. குட்டீஸோட வந்து என்ஜாய் பண்றதுக்கு, எக்கச்சக்க விஷயங்கள் காத்திருக்கு.

திடீர்னு என்ட்ரீ ஆகி, கொஞ்ச நாள்லயே குடும்பத்துல ஒருத்தரா மாறி, ஓனருக்கு விசுவாசமா இருக்கறதோட, அன்கன்டிஷனல் லவ் கொடுத்து, திக்குமுக்காட வைக்கறதுல, செல்லப்பிராணிகளுக்கு ஈடு இணையே இல்ல. இவங்களை அழகுப்படுத்தி பாக்குறதுக்குன்னு, பேஷன் டிரஸ் டிசைன் பண்ணி தர்ற, 'லே ஷீரோ' நிறுவனம், முதன்முறையா கோவையில, பூச் பார்ட்டி நடத்துறாங்க.

மாதம்பட், சி.எஸ்.ஆர்., ரெசார்ட்ல நடக்குற இந்த பார்ட்டில, டாக் காஸ்ட்யூம் பரேட், ட்ரைனிங் அண்டு ஒர்க் ஷாப், அடாப்டிங் டிரைவ், ஷாப்பிங், புட் பெஸ்டிவல்-னு, எக்கச்சக்க விஷயங்கள் காத்திருக்குது. கிட்ஸ்காகவே நிறைய ஆக்டிவிட்டி, கேம் ஜோன் இருக்குது. நுழைவு கட்டணம் வெறும், 99 ரூபாய் மட்டுமே. 'தினமலர்' நாளிதழ், இந்த ஈவன்ட்டுக்கு, மீடியா பார்ட்னரா கைக்கோர்க்குது. கூடுதல் விபரங்களுக்கு: leshiro.india@gmail.com / 90928 78000.

பப்பி காரு டூர் போறாரு!

மழை, வெயில்-னு எந்த கிளைமேட்டா இருந்தாலும், காரை எடுத்துட்டு, செல்லத்தோட ஊர் சுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு ஏற்ற புராடெக்ட் தான் இது.

கைக்குழந்தையை வெளியிடங்களுக்கு எடுத்துட்டு போற மாதிரியான மாடல்ல, உங்க பப்பிக்கும், டிராவல் ட்ராலி பேக் வந்துருக்கு. இதுக்குள்ள காற்றோட்டமா இருக்கறதுக்கு, சைட்ல நெட் கிளாத் அட்டாச் பண்ணியிருக்காங்க. ஜிப் கவர் இருக்கறதால, பப்பியை பத்திரமா உள்ளே வச்சிக்கலாம்.

இதுக்கு அடியில சக்கரம் இருக்கறதால, எங்க வேணும்னாலும் நகர்த்திட்டு போயிடலாம். வெளியூர், மால், ஷாப்பிங்-னு ஊர் சுத்த போகும் போது, உங்க பப்பியோட ஜாலியா வேடிக்கை பாத்துட்டே, டிராவல் பண்ணலாம்.ஆடி மாசம் வர்றதால, ஆபர்ல வாங்கி அசத்துங்க.

டாக்டர்'ஸ் கார்னர்: கருத்தடைக்கு ஏற்ற வயது!

என்னிடம் 'பீமேல்' பப்பி உள்ளது. இதை செல்லப்பிராணியாக வளர்ப்பதால், 'மேட்டிங்' விடாமல், கருத்தடை செய்யலாமா?--- ஆர்.சூர்யா, கோவை.

பெரும்பாலானோர், நாய்களை தான் செல்லப்பிராணியாக வளர்க்க ஆசைப்படுகின்றனர்.குறிப்பாக, 'பீமேல் பப்பி'யாக இருந்தால், அதன் இனம், உடலின் தன்மையை பொறுத்து, ஆறு மாதத்தில், குட்டி போட தயாராகிவிடும். இதை 'ஹீட் சைக்கிள்' என்பர். பிறப்புறுப்பில் இருந்து சிறிது ரத்தம் வெளியேறுவதன் மூலம், கருத்தரிக்க தயாராகிவிட்டதை அறியலாம். இச்சமயத்தில், அதே இனத்தை சேர்ந்த 'மேல் பப்பி'யுடன் இணைத்து, கருவுற செய்வர்.

இந்நடைமுறையை தவிர்க்க நினைப்போர், ஹீட் சைக்கிள் துவங்குவதற்கு முன்பு, அதாவது ஆறு மாதத்தில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம். 'அனிமல் வெல்பேர் போர்ட் ஆப் இண்டியா', ஆறு மாதத்தில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம் என பரிந்துரைக்கிறது. இச்சமயத்தில் சுரக்கும் சில ஹார்மோன்கள், பப்பியின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதால், ஒரு வயதுக்கு பிறகு கூட, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம். உங்கள் பப்பியின் ஹெல்த் ரிப்போர்ட் பொறுத்து, கால்நடை மருத்துவரை அணுகினால், உரிய சிகிச்சை வழிகாட்டுதல் பெறலாம்.

- கே.சுலோச்சனா,கால்நடை மருத்துவர், கோவை.

'செல்பி ஸ்டார்!'

உங்க 'பெட்'டோட ஸ்டைலா செல்பி கிளிக் செய்து அனுப்பினால் இப்பகுதியில் வௌியாகும். டி - சர்ட் பரிசாக வழங்கப்படும்.

மொபைல்: 99526 37026

லட்சம் பேருக்கு உங்களின் விவரம்!செல்லப்பிராணிகளுக்கான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உபகரணங்கள் விற்பனையாளர்கள்,'பெட் ஷாப்' உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், பராமரிப்பு ஆலோசகர்கள், 'பெட்' மருத்துவநிபுணர்கள் விவரம் இப்பகுதியில், கட்டணமின்றி வெளியாகும். உங்கள் விவரங்களை இ-மெயில்: chellame@dinamalar.in / 98940 09310 என்ற எண்ணிற்கு 'வாட்ஸ் ஆப்'பில்' அனுப்புங்க.






      Dinamalar
      Follow us