sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

வீட்டுக்குள் ஓர் குட்டி சரணாலயம்!

/

வீட்டுக்குள் ஓர் குட்டி சரணாலயம்!

வீட்டுக்குள் ஓர் குட்டி சரணாலயம்!

வீட்டுக்குள் ஓர் குட்டி சரணாலயம்!


UPDATED : ஏப் 13, 2024 02:17 AM

ADDED : ஏப் 12, 2024 11:28 PM

Google News

UPDATED : ஏப் 13, 2024 02:17 AM ADDED : ஏப் 12, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகலெல்லாம் சுட்டெரித்த சூரியன் சுடர் சுருட்டி மலை முகட்டில் மதிமயங்கி சாயும் மாலை நேரமது... கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோட்டில் காலார நடந்தோம் கன்டென்ட் கிடைக்காதா என...

ஓரிடத்தில் பறவைகள் சரணாலயத்தின் பரபரப்பு... ஆம், விதவிதமான பறவைகளின் கொஞ்சலும், கெஞ்சலுமான 'பேச்சு'கள் ஒலித்தன... மரங்களில் இருந்தல்ல... ஒரு கான்கிரீட் கட்டட வீட்டிலிருந்து... ஆச்சரியத்துடன் அங்கே அடியெடுத்து வைத்தோம். வாசலில் நின்றிருந்த பெண் வழிமறிக்க, 'பறவைகள் எங்களை அழைத்தன... வரலாமா' எனக்கூறி விவரம் தெரிவிக்க, வியப்புடன் பார்த்தார் அந்த வீட்டு ஓனர்.

அவர் பெயர் சுதா.

ஆர்வத்துடன் நம்மை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். ஹால் முழுவதும் பறவைகளின் கூண்டுகள். ' வா, நுா காவால்லய்யா..' சாங், சவுண்ட் சிஸ்டத்தில் முழங்க, அந்த பட ஹீரோயின் தமன்னாவுக்கே 'டப்' கொடுக்குற அளவுக்கு கழுத்தை வளைச்சு நெளிச்சு, உடலை ஆட்டிக்கிட்டிருந்துச்சு ஒயிட் காக்கட்டூ!

வியப்பில் ஆழ்ந்தோம்.

'சுதா...சுதா...! யாரிது, கெஸ்ட்டா'னு செல்லப்பேச்சில் கீச்சிட்டது ஒரு கிரே பேர்டு...

'ம்ம்ம். கெஸ்ட்' தான்னு சொல்லி, 'அது கிட்ட' எங்களை அறிமுகப்படுத்தினார் சுதா. 'அழகா பேசுது' என ஆச்சரியப்பட்ட நம்மை பார்த்து, 'இதுக்கே... அசந்துட்டா எப்படி? மொட்டை மாடிக்கு வாங்கோன்னு வாஞ்சையுடன் அழைத்துச் சென்றார் சுதா.

மொட்டை மாடி முழுக்க வித்தியாசமான விதவிதமான பேர்ட்ஸ். சுதாவோட குரல் கேட்டதும், அந்த இரும்புக் கூண்டையே தகர்த்துக்கிட்டு வெளிய வர்ற மாதிரி அங்கயும், இங்கயும் பறந்து கீச்சிட்டன பேர்ட்ஸ். ஒவ்வொன்றாய் அறிமுகப்படுத்தினார்.

''இவங்க எல்லாரும் என்னோட குழந்தைங்க. ஆரம்பத்துல எனக்கு பேர்ட்ஸ்னா பெரிய இஷ்டமில்ல. ஆனா, கணவர் கண்ணன் பேர்ட்ஸ் லவ்வர். அவருக்காக தான், இவங்கள பாத்துக்க ஆரம்பிச்சேன். ஆனா இப்போ, பேர்ட்ஸ் இல்லாம என்னால இருக்கவே முடியாது'', என்றார் தாய்மை உணர்வுடன்.

இவ்ளோ தான் பேர்ட்ஸான்னு கேட்டதும்,''செஞ்சேரிபுதுார்ல தோட்டம் இருக்கு. அங்க, 20க்கும் மேல வெரைட்டி பேர்ட்ஸ் இருக்கு. கவர்மெண்ட்ல அப்ரூவல் வாங்கிட்டு தான் வளர்க்குறோம்.அவங்ககிட்ட பேசலாமா''என,கண்கள் விரிய படபடத்தார்.

'இங்கிருந்தா... அது எப்படி?' என்றோம்.

'' தோட்டத்துல வாய்ஸ் ரெக்கார்டு கேமரா இருக்கு. இப்போ பாருங்களேன்னு போன்ல கனெக்ட் பண்ணி காட்டினார்.

'ஹே...பட்டூ...! பட்டுக்குட்டி' ன்னு சுதா பேசுன மறுநொடியில, போன் ஸ்பீக்கரே சூடாகுற அளவுக்கு பேர்ட்ஸ் சவுண்டு கொடுத்துச்சு. கொஞ்ச நேரம், ஹம்மிங் மூடுலயே இருந்துச்சு...சிறகை விரிச்சி, அதோட அலகால, சுதாவுக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடுச்சு...

பறவைகளுடன் கொஞ்ச நேரம் பறவையாக வாழ்ந்த அனுபவத்தோட சாலைக்கு வந்தோம்...

'பரபரப்பான உலகத்த பார்க்கவே பிடிக்கலை...' மனசுசொல்லுச்சு!

ஜாலியா ஒரு கென்னல் டூர் போலாம் வர்றீங்களா

சுற்றிலும் மலை, பச்சை பசேல்னு அசையற மரங்கள், சில்லுன்னு காற்று, கொளுத்துற வெயில்லயும் குளிர்ச்சியா இருந்துச்சு கோவை, சிறுவாணி ரோடு. ஒரு டாக்ஸி, எங்களை ஓவர்டேக் பண்ணுச்சு. அதுல, தலையை வெளியே நீட்டி, 'பாலோ மீ...'ங்கற ரியாக் ஷன் குடுத்துச்சு ஒரு கோல்டன் ரெட்ரீவர்.

அந்த பெட் டாக்ஸிய பின் தொடர்ந்தோம். மத்துவராயபுரம் ஜங்ஷன் தாண்டுனதும்,ஒத்தையடி பாதையில் வண்டி வேகமெடுத்தது. தோட்டத்துக்கு மத்தியில் அந்த டாக்ஸி நின்ற இடத்தில், 'தி பார்க் ஹவுஸ்' என்ற போர்டு பளிச்சிட்டது. இதோட ஓனர் ஜெகனை சந்தித்து அறிமுகப்படுத்திக்கிட்டோம்.

கென்னல் டூர் கூட்டிகிட்டு போனார் ஜெகன். நுழைவாயிலில் ஒரு குட்டிக்குளம்; அதை எட்டிப்பார்த்ததும் குடுகுடுன்னு ஓடிவந்துச்சு டர்ட்டில்ஸ். சைடுல கிரீன், ரெட் கலர்ல ரெண்டு இக்வானா, சன்பாத் எடுத்துட்டு இருந்துச்சு. வான்கோழி, கினி கோழி, பேன்சி பிஜின்ஸ், ஓரியன்டல் பிரில்ன்னு அங்கயும் இங்கயும் ஜாலியா சுத்திட்டு இருந்துச்சு பேர்ட்ஸ்.

இத்தன வெரைட்டியான்னு ஆச்சர்யத்தோடு கேட்டோம். இது வெறும் டீசர் தாங்க...ன்னு சொல்லிட்டு, கென்னல் ஆக்டிவிட்டிய சொல்ல ஆரம்பிச்சார்.

''நான் பேசிக்கா பெட்ஸ் லவ்வர். என்கிட்ட, 11 டாக்ஸ் இருக்கு. நீங்க என்ட்ரன்ஸ்ல பாத்த எல்லா பெட்ஸூம், என்னோட கலெக் ஷன்ஸ்தான். இவங்களுக்காக நேச்சர் சூழல்ல பெட்ஸ் ஜாலியா இருக்கற மாதிரி கென்னல் உருவாக்குனேன். ஈஷா பக்கத்துல இருக்கறதால புரோபஷன்னல்லா சில செட் அப் கொண்டுவந்தேன். கோவைக்கு டூர் வர்ற பெட் லவ்வர்ஸ் இங்கயும் விசிட் அடிப்பாங்க.

வெளிநாடுகளுக்கு டூர் போறவங்க,ஜாப் போறவங்க, வருஷ கணக்குல, அவங்க பெட்ஸ இங்க தங்க வைக்கிறாங்க. போர்டிங் விடுற செல்லப்பிராணிகளோட டெய்லி ஆக்டிவிட்டிஸ்ச ஓனருக்கு அப்டேட் பண்ணிடுவோம்''ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே, பெல்ஜியம் மெலன்வா ப்ரீடு, ஸ்விம்மிங் பூல்ல ஜம்ப் பண்ணுச்சு.

வெயில் அடிக்கறதால ஈவினிங் ஆகிட்டா, ஸ்விம் பண்ண போயிடுவாங்க என்றார்.

வேற என்னலாம் பண்றீங்க?

''குரூமிங், பெட் போட்டோகிராபி, பிசியோதெரபி பண்றோம். வீட்டுல பெட் இல்லாதவங்க, இங்க வந்து, பிரென்ட்லி பெட்ஸ கொஞ்சலாம். பெட் ஓனர்களுக்கு ஒர்க் ஷாப் எடுக்குறோம்'' என்றார். என்னது... ஒர்க் ஷாப்பா? ன்னு புருவங்களை உயர்த்தியதும்,'' பெட் வளர்க்குற பலருக்கு, அதை எப்படி பேஸிக்கா ஹேண்டில் பண்றது, வீட்டுலயே குரூம் பண்றது, ஒன் அண்டு டூ டிரெயினிங் கொடுக்கறது தொடர்பான கிளாஸ் நடத்துறோம். இதுக்கு சிலபஸ்லாம் இருக்கு,'' என்றார்.

அதுசரி... விட்டா, பரீட்சல்லாம் வைப்பாரு போல இருக்கே!

சடுகுடு விளையாடும் 'கினிபிக்ஸ்'!

பிளாக், பிரவுன், ஒயிட் கலர்ஸ்ல குட்டியா, அழகா, புஸூ புஸூ ஹேருடன் இருக்கும் கினிபிக்ஸ் (கினிப்பன்றி) வெரைட்டி தான், குட்டீஸ்களின் பேவரட் பெட் லிஸ்ட்டில் இருக்கு. பார்க்க முயல் மாதிரியே இருக்குற இந்த கினிபிக்ஸ் பத்தி ஆர்வமாய் பகிர்ந்தார், கோவில்பாளையத்தை சேர்ந்த, 'எஸ்.எம்., பெட் ஜோன்' உரிமையாளர் மதுமிதா.

நம்மோடு பகிர்ந்தவை:

''அபிசினியன், பெருவியன், சில்கின்னு, 25க்கும் மேல வெரைட்டி கினி பிக்ஸ், செல்லப்பிராணியா வளக்குறாங்க. சின்ன இடத்துலயும், துறுதுறுன்னு ஓடிட்டே இருக்கும். ஆனா தாவுறது, சுவர்ல ஏறுறதுன்னு, எந்த சேட்டையும் பண்ணாது.

காய்கறி, கீரை, பச்சைப்புல் விரும்பி சாப்பிடும். இதுக்கு கமர்ஷியல் புட் கடைகளில கிடைக்குது. சாப்பாடும், வாட்டரும் பக்கத்துல வச்சுட்டா சமத்துக்குட்டியா இருந்துக்கும். ஆக்டிவ்வா இருக்கறதாலயே குட்டிஸ்களோட பேவரட் பெட்டா மாறிடுச்சு. ஓனர்கிட்டயும் ஈஸியா அட்டாச் ஆகிடும்.

வேலைக்கு போறவங்க, அப்பார்ட்மெண்ட், குவாட்ரஸ் மாதிரியான சூழல்ல இருக்கறவங்களுக்கு, கினிபிக்ஸ் வளக்குறது நல்ல சாய்ஸ். இதுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். இதோட ஒரு ஜோடி விலை, 3,500 ரூபாய் தான்'' என்றார்.

ஐஸ் பேக் ஒத்தடம்!

நாய்களுக்கு அடிப்பட்டால் முதலில் ரத்தம் கசிவதை நிறுத்த சுத்தமான துணி கொண்டு அந்த இடத்தை கட்ட வேண்டும். அதன் மேல், ஐஸ் பேக் மூலம் ஒத்தடம் கொடுக்கும் போது ரத்தம் கசிவது நின்றுவிடும். உடனே, கால்நடை மருத்துவரை அணுகுவதே சிறந்தது. காயம்பட்ட இடத்தை சுற்றிலும் உள்ள முடிகளை அப்புறப்படுத்திவிட்டு சிகிச்சை அளிக்கப்படும். திறந்தநிலையிலே இருந்தால் புண் சீக்கிரம் ஆறிவிடும். காயம் ஆறுவதற்கு ஸ்பிரே வடிவிலும் மருந்துகள் கிடைக்கின்றன.

தற்போது கோடைக்காலம் துவங்கிவிட்டதால் நாய்களுக்கு தண்ணீர் அதிகம் கொடுக்க வேண்டும். உடல் மீது, வாட்டர் ஸ்பிரே அடித்துவிடலாம். 10 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெய், மசாஜ் ஆயில் கொண்டு உடலை நீவிவிட்டால், புத்துணர்வு ஏற்படும். தினமும் 100 மிலி வரை மோர், தேங்காய் பால் ஆகியவற்றை குடிக்க கொடுப்பதாலும், உடலின் வெப்பத்தை சமன்படுத்த முடியும்.

வெஜிடேரியன் விரும்பி

''எங்க சிஸ்லி பம்ப்கின், ஸ்வீட் பொட்டட்டோ, குச்சி கிழங்குன்னு வெஜ் ஐட்டமா விரும்பி சாப்பிடும். நான்வெஜ் விட, முட்டைன்னா அவ்ளோ பிரியம். டாய்ஸ் மட்டும் கொடுத்துட்டா, ஒரு நாள் பூரா விளையாடிக்கிட்டே இருக்கும்,'' என தன் பெட் சிஸ்லி பற்றி சொல்கிறார் கோவையைச் சேர்ந்த சிந்து.

'' நான் ஒரு பெட் லவ்வர்ங்க, வீட்ல லவ் பேர்ட்ஸ், பிஷ் நெறைய வளர்க்குறோம். இது சிட்சு வகை பிரீட், 11 மாசம்தான் ஆகுது. ரொம்ப பொசசிவ்வா இருப்பா. ஜம்ப், ப்ளே, ரன் இந்த மாதிரி கமெண்ட் கொடுத்தா, சிஸ்லி ஈஸியா புரிஞ்சுக்கும். மம்மு ரெடின்னா சில்ஸி சிட்டா பறந்து வந்துடுவா,'' என்கிறார் சிந்து.






      Dinamalar
      Follow us