ADDED : மார் 07, 2025 08:51 PM

சாப்பிடாமல் அடம்பிடிக்கும், உங்கள் பப்பிக்கு, சத்துள்ள உணவுப்பொருட்கள் கொண்டு, ஸ்நாக்ஸ்தயாரித்து தந்தால், ருசித்து சாப்பிடுவதோடு, ஆரோக்கியமாகவும் வளரும்.
ரெசிபி இதோ: விதை நீக்கப்பட்ட ஒரு ஆப்பிளை, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனுடன், ஒரு ஸ்பூன் அளவில், 'சியா' விதை எடுத்து, அதை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின், ஆப்பிள் துண்டுகளுடன், ஊற வைத்த சியா விதைகளை, தண்ணீருடன் மிக்ஸியில் சேர்க்கவும். இதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய், சிறிது தேன் கலந்து நன்கு அரைக்கவும்.
இக்கலவையை, பல்வேறு வடிவங்களில் கடைகளில் கிடைக்கும் சிலிக்கான் மோல்டில் சேர்க்கவும். இது இல்லாவிடில், ஒரு பிளாஸ்டிக் அல்லது சில்வர் பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி, இக்கலவையை ஊற்றலாம். இதை, இரவு முழுக்க, ப்ரிட்ஜில் உள்ள ப்ரீசரில் வைத்து, அடுத்த நாள் எடுத்து, பப்பிக்கு பரிமாறலாம். இதில் சேர்க்கப்பட்ட அனைத்தும், பப்பியின் உடல்நலத்திற்கு நன்மை செய்வதால், அடிக்கடி செய்து கொடுத்து அசத்துங்க.