ADDED : ஜூன் 01, 2024 09:26 AM

''சேறும் சகதியுமான ரோடு, செங்குத்தான மலை, காட்டுவழி பாதையை கடந்து கொடைக்கானல், கூக்கால் நீர்வீழ்ச்சிக்கு போக, கூகுள் மேப் மாதிரி வழிகாட்டுனது, ஒரு குட்டி பப்பி தான்,'' என ஒரு நாய்க்குட்டி உடனான, பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார், கோவையைச் சேர்ந்த ஹரிஹரன்.
பயண அனுபவங்களை போட்டோக்களுடன் 'செல்லமே' பகுதி, இ-மெயிலுக்கு அனுப்பியிருந்தார் இவர். '' கொடைக்கானல்ல இருந்து, கிட்டத்தட்ட 35 கி.மீ., தாண்டி இருக்கற, கூக்கால் நீர்வீழ்ச்சிக்கு, ப்ரெண்ட்ஸோட சேர்ந்து, ட்ரிப் போனேன். அந்த கிராமத்துல இருந்த, ஒரு ரெசார்ட்ல தங்கும் போது, துறுதுறுன்னு இருந்த ஒரு குட்டி பப்பி, எங்க கேங்க்கோட ரொம்ப அட்டாச் ஆகிடுச்சு. அடுத்தநாள் காலையில, நீர்வீழ்ச்சிக்கு கிளம்புனதும், எங்களோட சேர்ந்து நடக்க ஆரம்பிச்சுது.
மண் ரோடு, செங்குத்தான மலை, காட்டு வழி பாதைன்னு, ரொம்ப கரடுமுரடா இருந்த பாதையில, எங்களை கூட்டிட்டு போனதே, அந்த பப்பி தான். தண்ணியில ஜாலியா விளையாடி என்ஜாய் பண்ணுச்சு. ரெசார்ட் போறதுக்கு திரும்புற வழியில, எங்களுக்கு 'டாடா' காட்டிட்டு, வேற டீமுக்கு கைடா மாறிடுச்சு. கூக்கால் வர்ற நிறைய டூரிஸ்ட்டுக்கு, இந்த பப்பி தான் கூகுள் மேப்பா இருக்குனு, அந்த கிராமவாசிகள் சொன்னாங்க. கடைசி வரைக்கும், அதோட ஓனர் யாருன்னே தெரியலை. புதுசா பாக்கறவங்க மேலயும், அன்கண்டிஷனல் லவ் காட்டுறது பப்பிஸ் மட்டும் தான்,'' என்றார்.
''நீங்க கூக்கால் போனா, அந்த பப்பிய கேட்டதா சொல்லுங்கோ,'' என முடித்தார், கோவையன்ஸ் குசும்போடு.