sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும்!

/

வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும்!

வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும்!

வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும்!


ADDED : பிப் 22, 2025 07:47 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''எங்கள் ரெஸ்டாரன்டிற்குள் நுழைந்து, இங்குள்ள பப்பி, மியாவ்வை கொஞ்சிவிட்டு, பின் விரும்பியதை சாப்பிட்டால், பசியோடு, உங்கள் கவலையும் பறந்து போய்விடும்,'' என்கிறார், 'ட்விஸ்டி டெய்ல்ஸ் ரெஸ்டாரன்ட்' (Twisty Tails Restaurant) உரிமையாளர் ரேகா டான்டே.

செல்லமே பக்கத்திற்காக, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:


சென்னை, நுங்கம்பாக்கத்தில், கிட்டத்தட்ட 5,500 சதுர அடியில், ரெஸ்டாரன்ட் அமைத்துள்ளோம். இங்கே பெட் ஜோன், பார்ட்டி ஹால், ரெஸ்டாரன்ட் இருக்கிறது. பெட் ஜோன் ஏரியாவில், கிட்டத்தட்ட 30 பப்பி, 30 மியாவ்ஸ், உங்களுக்காக காத்திருக்கும். இவற்றை ஆசைத்தீர கொஞ்சி, விளையாடி, செல்பி எடுத்து, பிறகு சாப்பிட வரலாம். மதியம் 12:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை திறந்து வைத்திருப்போம். வெஜிடேரியன் உணவுகள் மட்டுமே இங்கு கிடைக்கும்.

இங்குள்ள பார்ட்டி ஹாலில், வீட்டு விசேஷங்களை செலிபிரேட் செய்யலாம். இங்கே வந்தால், வயிறு மட்டுமல்ல, மனமும் நிறையும். சாப்பிட வருவோரில் பலர், எத்தனையோ குழப்பம், கவலை, மன அழுத்தத்துடன் உள்ளே நுழையலாம். இங்கே காலடி எடுத்த வைத்த அடுத்த நொடியில், அனைத்தையும் மறந்து, பப்பிகளுடன் நேரம் செலவிடுவதை காண முடிகிறது.

இந்த ஐடியா எப்படி?


இது முழுக்க, என் சொந்த அனுபவங்களின் பிரதிபலிப்பு. திடீரென ஒருநாள், என்னால் இயல்பாக இயங்க முடியாமல், உடல்நிலை மோசமானதோடு, மனமும் மிகுந்த அழுத்தத்திற்கு ஆட்பட்டது. என் வாழ்வில் எல்லாம் முடிந்தது என்ற சூழலில், இறுதி நம்பிக்கையாக அச்சூழலில் இருந்து முற்றிலுமாக என்னை கடத்தி, வாழ்வின் புதிய பரிணாமத்தை அடையாளம் காட்டியவை, செல்லப்பிராணிகள் மட்டுமே. பப்பி, மியாய்வை கொஞ்சும் அத்தருணத்தில், நமக்குள் இருக்கும் எல்லா கவலைகளும் மறைவதை காணலாம். என்னுடன் எப்போதும் செல்லப்பிராணிகள், உடனிருக்க வேண்டும் என்பதற்காகவே, 'ரெஸ்டாரன்ட்' துவக்கினோம். சென்னையில், வார இறுதி நாட்களில், வீட்டிற்குள் முடங்கி கிடக்க முடியாமல், ஊர் சுற்றும் பலரும், ஓட்டல்களை தேடி, புதிய வகை உணவுகளை ருசிப்பதை, ஹாபியாக வைத்துள்ளனர். இவர்கள், இங்கே வந்தால், உணவோடு, உணர்வு ரீதியான தொடர்பையும், அனுபவிக்கலாம். மறக்காம ஒருமுறை வந்து, வயிறார சாப்பிட்டு, செல்லங்களை கொஞ்சிவிட்டு போங்க.

தொடர்புக்கு: twistytailsresto@gmail.com

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us