sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

செல்லமே

/

 குரலிலே நடுங்க வைக்கும் குட்டி 'டான்'

/

 குரலிலே நடுங்க வைக்கும் குட்டி 'டான்'

 குரலிலே நடுங்க வைக்கும் குட்டி 'டான்'

 குரலிலே நடுங்க வைக்கும் குட்டி 'டான்'


ADDED : பிப் 21, 2026 09:00 AM

Google News

ADDED : பிப் 21, 2026 09:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''இந்த குட்டி குரவளையில் இருந்து எப்படி இவ்வளவு பெரிய சத்தம் வருகிறது என்ற ஆச்சர்யம் தான், பொமரேனியனுக்கான ரசிகர் பட்டாளத்தை அதிகரிக்க செய்திருக்கும்,'' என்கிறார், கோவையை சேர்ந்த 'ப்ரீடர்' ராம்குமார்.

கோவை, வேடப்பட்டியில், யாழி கென்னல் நடத்தி வருகிறார் ராம்குமார்; பொறியியல் பட்டதாரி. 15 ஆண்டுகளாக, 'ப்ரீடிங்' துறையில், பல்வேறுஇன நாய்களை இனப்பெருக்கம் செய்கிறார். பொமரேனியன் இன பப்பி பற்றி சுவாரஸ்யமான தகவல்களை, நம்மிடம் பகிர்ந்தார்.

அவை:

* பொமரேனியன் இனத்தில், இண்டியன் ஸ்பிலிட், கல்சர், மினியேச்சர், ஸ்டாண்டர்டு, பாக்கெட் சைஸ் என ஐந்துவிதமான அளவுகளில், இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதில், பாக்கெட் சைஸ் பப்பி, மிகச்சிறியதாக இருப்பதால் மார்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

* இது ஜெர்மன் நாட்டை சேர்ந்தது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இனங்களில், மிக பழமையானது. இங்கே இனப்பெருக்கம் செய்வதால், நம் நாட்டின் தட்பவெப்ப சூழலுக்கு, தகவமைத்து கொண்டது.

* சிறிய இனங்களிலே, 12-16 ஆண்டுகள் வாழக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நியூட்ரீஷியன் உணவுகளை தேடி வாங்கி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குறைந்த அளவே உணவு சாப்பிடும். அதிக முடி இருப்பதால், பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

* எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, வீட்டிலிருப்பவர்களோடு அதிகம் விளையாடி கொண்டே இருக்கும். குறைவான நேரமே துாங்கும். புதிதாக நாய் வளர்ப்பவர்களுக்கு ஏற்ற இனம். சிறியதாக இருந்தாலும், எந்நேரமும் அலர்ட்டாக இருப்பதால், பாதுகாப்புக்கு ஏற்றது.

* ஒரு குட்டி 'டான்' போல வலம்வரும். பெரிய இன பப்பிகளை பார்த்தால் சற்றும் பயப்படாமல், குரைத்து வம்புக்கு இழுக்கும். இதன் சின்ன குரல்வளையில் இருந்து வரும் வித்தியாசமாக சத்தம் தான், நம்மை ஆச்சர்யப்படுத்தும்.

* குரைத்தே ஒருவரை பயமுறுத்திவிடும். புதிய நபர்கள், திருடர்கள் இதனிடம் தப்பவே முடியாது. வித்தியாசமாக சத்தமிட்டு காட்டி கொடுத்துவிடும்.

* அதீத சுறுசுறுப்பாக இருப்பதால், உங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பயிற்சி அளித்து, வளர்ப்பது நல்லது. எல்லா வயதினரும் வளர்க்கலாம். வீட்டில் ஒரு குழந்தையின் சேட்டையை, இதன் துறுதுறு செயல்பாட்டில் இருந்து அறியலாம், என்றார்.






      Dinamalar
      Follow us