ADDED : மே 04, 2024 08:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சம்மர் லீவு விட்டாச்சு. என்னை எங்கயாவது கூட்டிட்டு போங்கன்னு, குட்டீஸோட சேர்ந்து, உங்க பப்பிஸூம் குறும்பு பண்ணுதா? அவங்களுக்காகவே, ஊட்டில வர்ற, 10- 12 ம் தேதிகள்ல, பிரமாண்டமா டாக் ஷோ நடக்குது.
தி சவுத் ஆப் இண்டியா கென்னல் கிளப் சார்புல, குளுகுளு க்ளைமேட்ல, வெகேஷன் டைம்ல, இந்த டாக் ஷோக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர்ல இருந்து, ஜட்ஜ் வந்து, உங்க செல்லத்தோட ஸ்பெஷல் டேலன்ட்டுக்கு, மார்க் போடுவாங்க.வர்ற 10ம் தேதி, ஒபீடியன்ஸ் டெஸ்ட் நடக்குது.
11,12 ம் தேதிகள்ல, சேம்பியன்ஷிப் ஷோ இருக்கு. பப்பியோட திறமையை காட்டி, கை நிறைய மெடல்ஸ் அள்ளலாம். அப்புறம் என்னங்க! கொளுத்துற வெயில்ல இருந்து தப்பிக்க, ஊட்டிக்கு கிளம்ப தயாராகுங்க.