sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

ஆர்க்டிக் டெர்ன்... 35,000 கி.மீ. பறக்கும்

/

ஆர்க்டிக் டெர்ன்... 35,000 கி.மீ. பறக்கும்

ஆர்க்டிக் டெர்ன்... 35,000 கி.மீ. பறக்கும்

ஆர்க்டிக் டெர்ன்... 35,000 கி.மீ. பறக்கும்


UPDATED : நவ 15, 2025 08:54 AM

ADDED : நவ 15, 2025 08:50 AM

Google News

UPDATED : நவ 15, 2025 08:54 AM ADDED : நவ 15, 2025 08:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஹம்மிங் பறவைகள் தனித்துவமான தோள்பட்டை, மூட்டு காரணமாக பின்னோக்கி பறத்தல், வட்டமிடுதல், பக்கவாட்டில் பறக்கின்றன.

* தீக்கோழி, ஈமு, பென்குயினுக்கு, இறக்கை இருந்தும் பறப்பதில்லை. கிவி பறவைக்கு மிகச்சிறய இறக்கைகளே இருப்பதால், அவற்றால் பறக்க முடிவதில்லை.

* உலகிலேயே நச்சுத்தன்மை கொண்ட பறவை 'ஹூட் பிடோஹூய்'. தோல், இறகுகளில், ஒருவித நச்சுத்தன்மை வெளிப்படுவதால், அதைதொட்டால் அரிப்பு, உணர்வின்மை ஏற்படும்.

* வட துருவம்- தென் துருவம் வரை செல்லக்கூடிய ஒரே பறவை 'ஆர்க்டிக் டெர்ன்'. இது, 35,000 கி.மீ., தொலைவு வலசை போகக்கூடியது.

கின்னஸ் சாதனை


* உலகிலேயே நீண்டநாள் உயிர் வாழ்ந்ததற்கு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது, அமெரிக்காவை சேர்ந்த, க்ரீம் பப் என்ற பூனை. இறக்கும் போது இதன் வயது, 38 ஆண்டுகள், 3 நாட்கள்.Image 1495228* பூனைகளின் ஒவ்வொரு காதிலும், 32 தசைகள் இருப்பதால், 180 டிகிரி வரை சுழற்றும். மனிதர்கள், நாய்களை விட, அதிக அதிர்வெண் கொண்ட ஒலியை (55-79 கிலோ ஹெர்ட்ஸ்), இவற்றால் கேட்க முடியும்.

* கண்களுக்கு பாதுகாப்பு, ஈரப்பதத்தை ஏற்படுத்த 'நிக்டிடேட்டிங்' சவ்வு என்ற மூன்றாவது கண் இமை உண்டு. இதன் வழியேஒளி ஊடுருவும்.

யானை விழா


* தாய்லாந்தில், மார்ச் 13ம் தேதி, தேசிய யானை தினம் மற்றும் நவம்பர் 3வது வாரம், சுரின் யானை விழா கொண்டாடப்படுகிறது.

* ஸ்பெயின், மாட்ரிட்டில் உள்ள, சான் அன்டன் தேவாலயத்தில், செல்லப்பிராணிகளுக்கான ஆசிர்வாத விழா, ஜன.,17ல் நடக்கிறது.

* நேபாளத்தின், பாரம்பரியகுக்கூர் திகார் திருவிழாவில், நாய்களுக்கு மாலை அணிவித்து, கவுரவப்படுத்துகின்றனர்.

* ஜப்பான், காகுரசாகாவில், அக்.,மாத இறுதியில், பூனைகளைபோல உடையணிந்து, பொதுமக்கள் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

* மும்பை, டில்லி, பெங்களூரு, பூனே போன்ற முக்கிய நகரங்களில் பெட் பெட் (Pet Fed) திருவிழா, ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.Image 1495229

தொட்டால் 'ஷாக்'


* தங்கமீன்களுக்குவடிவம், வண்ணம், ஒலிகளை வேறுபடுத்தி அறிதல் திறன் உள்ளது.

* ஆப்பிரிக்காவில் வாழும் 'எலக்ட்ரிக் கேட் பிஷ்', தண்ணீரில் ஒருவித மின் அதிர்வுகளை ஏற்படுத்தி, எதிரிகளிடம் இருந்து தப்பிக்கிறது.

* உலகில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளன. அமேசான் படுகைகளில் மட்டும், 3,000க்கும் மேலான இனங்கள் வாழ்கின்றன.

* உலகின் மிகச்சிறிய மீன் இனம், 'பேடோசைப்ரிஸ்'. ஒரு முதிர்ச்சியடைந்த இம்மீனின் நீளம் 7.9 மி.மீட்டர் மட்டுமே.

நான் யார் தெரியுமா...


பிரபல கார்டூன் கதாபாத்திரங்கள் எந்த இனத்தை சேர்ந்தவை தெரியுமா...

* ஸ்னுாபி- பீகிள் இன பப்பி.

* சாண்டாஸ் லிட்டில் ஹெல்பர்- கிரே ஹவுண்ட் நாய்.

* புளூட்டோ- பிளட் ஹவுண்ட் இன பப்பி

* 'ஸ்கூபி- டூ' -கிரேட் டேன் இன நாய்.

* டாம் அண்டு ஜெர்ரி- சாதாரண எலி, பூனை இனங்கள்.

* லேடி அண்டு தி ட்ராம்ப்- காக்கர் ஸ்பானியல் மற்றும் தெருநாய்

* சின்சான்- இதில் வரும் 'ஷீரோ' கதாபாத்திரம், மால்தீஸ் இன நாய்.






      Dinamalar
      Follow us