ADDED : ஜூன் 15, 2024 08:19 AM

''பொதுவா பூனைக்கும், நாய்க்கும் ஏழாம் பொருத்தம் என்பார்கள்.. ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டால், 'லொள்..லொள்...; மியாவ்வ்...!' என ஒரே கூச்சல் தான். ஆனால், ஒரே வீட்டில் சிறு வயது முதல் பூனை, நாய்குட்டியை வளர்த்தால், அவர்கள் சகோதரர்கள் போல பழகுவார்கள்,'' என்கிறார், ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா பகுதியை சேர்ந்த கலைவாணி. தன் செல்லப்பிராணிகள் குறித்து, ஆர்வமாய் படபடத்தார்.
எங்க வீட்டுல, பெட்ஸ பாத்துக்கறது பசங்க தான். பொண்ணு ராஜஸ்ரீயும், பையன் தஸ்வினும் இருந்தா போதும். இவங்களுக்கே, தலா 10, 8 வயசு தான் ஆகுது. ஆனா, ஸ்கூல் முடிச்சிட்டு இவங்க வீட்டுக்கு வந்தா, பீனாவும் (பூனை), ஜூலியும்(நாய்) இவங்க பின்னாடியே தான் சுத்திக்கிட்டு இருக்கும். நாலு பேரும் பிரெண்ட்ஸ் மாதிரி, ஜாலியா விளையாடுவாங்க.
பீனாவையும், ஜூலியையும் குளிப்பாட்டுறது, மேக்கப் போட்டு விடுறது எல்லாமே பசங்க தான். பெரிய மனுஷங்க மாதிரி பொறுப்பா நடந்துக்குவாங்க. வீட்டுல குட்டீஸோட சேர்ந்து, செல்லப்பிராணிகளும் வளர்றதால, ஒவ்வொரு நாளும் சேட்டைக்கும், கொண்டாட்டத்துக்கும் பஞ்சமில்லை, என்றார்.

