sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

சண்டைக்கு முந்தும்... சளைக்காமல் நீந்தும்!

/

சண்டைக்கு முந்தும்... சளைக்காமல் நீந்தும்!

சண்டைக்கு முந்தும்... சளைக்காமல் நீந்தும்!

சண்டைக்கு முந்தும்... சளைக்காமல் நீந்தும்!


ADDED : ஆக 10, 2024 11:06 AM

Google News

ADDED : ஆக 10, 2024 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கற்பனைக்கு எட்டாத வண்ணங்களில், இறக்கை விரித்து, நீந்தும் மீன்களை, வீட்டில் வளர்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதிலும், அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன், இரு வாரங்கள் வரை, தண்ணீர் மாற்றாமல், உணவே இல்லாமல் கூட, ஆக்டிவ்வாக நீந்தும் 'பைட்டர்' மீன்களை பற்றி விவரிக்கிறார், கோவை, 'ட்ரீம்ஸ் அக்வாரியம்' உரிமையாளர் காளிமுத்து. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள், அக்வாரியம் பீல்டில் அனுபவம் கொண்ட இவர், நம்மோடு பகிர்ந்தவை:

*புதிதாக மீன் வளர்ப்பவர்களுக்கு ஏற்ற வெரைட்டி, பைட்டர். இதை அரை லிட்டர் கொள்ளளவு கொண்ட, சிறிய பவுலில் கூட வளர்க்கலாம்.

*சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, கருப்பு, வெள்ளை என பல்வேறு நிறங்களில், கற்பனைக்கு எட்டாத புதிய வண்ண கலப்பில், வித்தியாசமான இறக்கைகளுடன், 20க்கும் மேற்பட்ட வெரைட்டிகளில், பைட்டர்கள் கிடைக்கின்றன.

*கிரவுன் டெய்ல், கேம்ப் டெய்ல், டெல்டா, டபுள் டெய்ல், எலிபண்ட் இயர், ஹாப் மூன், புல் மூன், ரோஸ், ரவுண்ட் வெய்ல், ஓ.எச்.எம்., நியூமோ கேண்டி, தம்போ ஏர் பைட்டர் மீன்களின், இறக்கை வித்தியாசமாக காணப்படுவதால், சிறுவர்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

*இதற்கு ஆக்ஸிஜன் மோட்டர் தேவையில்லை. நீரின் மேற்பரப்பில் இருக்கும் காற்றை சுவாசித்து உயிர்வாழும்.

*புரோட்டீன் நிறைந்த உணவு, நல்ல தண்ணீர் இருந்தால், சராசரி ஆயுட்காலமான 2 ஆண்டுகளையும் தாண்டி, சுறுசுறுப்பாக நீந்திக்கொண்டே இருக்கும்.

*பைட்டர் பொறுத்தவரை, ஆண், பெண் இன மீன்களை ஒரே பவுலில் போட்டால் சண்டையிட்டு கொள்ளும். ஆனால், ஆண், பெண் மீன்களை குழுவாக சேர்த்து, பிரத்யேக டேங்கில் நீந்தவிடலாம்.

அடைக்காக்கும் ஆண் மீன்பைட்டர் பொறுத்தவரை, எட்டு மாதத்தில் முட்டை வைக்கும் தகுதியை பெறும். இச்சமயத்தில், தனித்தனியே பவுலில் இருக்கும் ஆண், பெண் பைட்டர்களை அருகருகே வைக்க வேண்டும்.கண்களால் ஒன்றையொன்று பார்த்து கொண்டால் தான், இனப்பெருக்கத்திற்கான ஹார்மோன் சுரக்கும். ஆண் பைட்டர் பவுலில், நுரை போல தண்ணீர் மேல மிதக்கும் போது, பெண் மீனை உள்ளே விட வேண்டும்.

ஒரே நாளில், பெண் மீனின் வயிற்றில் இருக்கும் முட்டைகளை வெளியேற்றி, மிதக்கும் நுரைக்குள் கொண்டு போய் வைத்து, ஆண் மீன் அடைகாக்கும். இரு நாட்களில், முட்டையில் இருந்து புதிய வாரிசுகள் உருவாகி வெளியே எட்டிப்பார்க்கும். இத்தருணத்தில், அம்மா பைட்டரை வெளியே எடுத்துவிட வேண்டும். குட்டி மீன்களை பாதுகாக்கும் பொறுப்பு, அப்பா பைட்டருக்கானது. டார்பினியா, மொய்னா, ஆர்டிமியா போன்ற சிறிய ரக பூச்சிகளை, தொட்டியில் போட்டால், குட்டி மீன்கள் அதை சாப்பிட்டு, ஆரோக்கியமாக வளரும்.

ஒரு மாதத்தில், குட்டி மீன்களை தனியே பிரித்து வழக்கமான பைட்டருக்கான உணவுகளை வழங்கலாம். ஒருமுறை பிரீடிங் செய்யும் போது, 300-400 குட்டி மீன்கள் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us