
பூனையை பொறுத்தவரை அது நினைத்தால் தான் விளையாடும். அதிகமாக சாப்பிட்டால், உடல்நிலை சரியில்லாத போது சோர்வாக மூலையில் படுத்துக் கொள்ளும். இதை உற்சாகப்படுத்தி விளையாட வைத்தால், மியாவ் என ரீங்காரத்துடன் குஷியாகிவிடும். இதற்கு, பறக்கும் பொம்மைகளை வாங்கலாம். நிறைய வடிவங்களில், லைட் பொருத்தியபடி இருக்கும் இந்த பொம்மைகளை இயக்கும் போது, அவை தரையில் இருந்து சிறிது துாரத்திற்கு பறக்கும். அதை பிடிக்கும் ஆர்வலத்தில் பூனை துரத்தி கொண்டே ஓடும். இதை பார்த்து ரசித்தால், நம் மன அழுத்தமும் பறந்துவிடும்.
மீனுக்கும் பூனைக்கும்
தவளை வெரைட்டியான பேக்மேனை, செல்லப்பிராணியாக வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதை, மீன்தொட்டிக்குள் வைத்து வளர்க்கும் போது, தேங்காய்நாரால் செய்யப்பட்ட மெத்தை, அது மறைவாக ஒளிந்திருக்க இடம், தண்ணீர் வைக்க வேண்டும். அத்துடன் அவை விளையாட சில பொருட்களை தொட்டிக்குள் வைக்க வேண்டும். சிறிய டயர் போன்ற வடிவிலான இந்த பொம்மையை, தொட்டிக்குள் தொங்கவிட்டால், அது தாவி தாவி விளையாடி மகிழும். இது, ஆன்லைன், கடைகளில் கிடைப்பதால் உடனே வாங்கிடுங்க.

