sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

செலிபிரிட்டிஸ் தேடுற பெட் குரூமர்!

/

செலிபிரிட்டிஸ் தேடுற பெட் குரூமர்!

செலிபிரிட்டிஸ் தேடுற பெட் குரூமர்!

செலிபிரிட்டிஸ் தேடுற பெட் குரூமர்!


ADDED : ஏப் 06, 2024 08:37 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 08:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செலிபிரிட்டிஸ் பெட்ஸ் மட்டும் எப்படி இவ்ளோ ஷைன்னிங்கா இருக்குங்கற கேள்வியை கூகுளில் தட்டினால், சோசியல் மீடியா பேஜ்களில், டாப் லிஸ்டில் இருக்கிறார், சென்னையை சேர்ந்த குரூமர் அருண்கிரி.

இவரது புரொபைல் வாசித்ததும், ஆர்வம் அதிகமாகிடுச்சு. 23 வயசுல, இத்தனை செலிபிரிட்டி கம்ஸ்டமர்ஸ் எப்படின்னு கேட்டதும், சிரிச்சிட்டே பேச தொடங்கினார்.''என்னோட 12 வயசுலயே, இந்த பீல்டுக்கு வந்துட்டேன். ஒரு கிளினிக்ல குரூமர் கிட்ட அசிஸ்ட்டன்ட்டா இருந்து, தொழில் கத்துக்கிட்டேன். அந்த கிளினிக் மூலமா தான், கமல் சார் பழக்கம். இன்டர்வியூ வச்சி தான், என்னை செலக்ட் பண்ணாங்க.

ஓ...!, இதுக்கெல்லாம் இன்டர்வியூவ்வா?

ஆமாங்க. ஒரு சின்ன பையன நம்பி, செல்லப்பிராணிகளை கொடுப்பாங்களா...? ஒரு டெமோ குரூமிங் பண்ணேன். என்னோட ஒர்க் பிடிச்சதால, ஓகே சொல்லிட்டாங்க. கமல் சாரோட, 5 கோல்டன் ரெட்ரீவர்க்கும், நான் தான் குரூமர். என்னோட கேரியர் அங்கிருந்து தான் தொடங்குச்சு. அந்த பணத்துல தான், ஸ்கூல், காலேஜ் முடிச்சேன்.

சோசியல் மீடியா, என்னோட பிளாட்பார்ம். செலிபிரிட்டி வீட்டு செல்லப்பிராணிகளுக்கு குரூமிங் முடிச்சிட்டு, போட்டோஸ் எடுத்து, இன்ஸ்ட்டா, பேஸ்புக்ல போஸ்ட் பண்ணுவேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. இப்போ, நடிகர் தனுஷ், ஜீவா, விக்ரம்பிரபு, ரம்யாகிருஷ்ணன் மேடம், டைரக்டர் பாரதிராஜான்னு, 10க்கும் மேல செலிபிரிட்டி கிளைன்ட்ஸ் இருக்காங்க.பெட்ஸ நீங்க எப்படி ஹேண்டில் பண்ணுவீங்க?புதுசா வர்ற பெட்ஸ், முதல்ல என்னை நம்பணும். குரூமிங் பண்றேன்னு, சீப்பு, சிசர்ர எடுத்துக்கிட்டு, உடனே களத்துல குதிச்சா, அது தாவி ஓடிடும். அதனால பெட்ஸோட சோசியலா அட்டாச் ஆகிட்டு, பேசிக் குரூமிங் முடிச்சிட்டு தான், அடுத்தடுத்த ஸ்டெப் பண்ணுவேன். ஓனர்கிட்ட அடம்பிடிக்கிற பெட்ஸ் கூட என்கிட்ட சமத்துக்குட்டியா இருக்கும்.

குரூமிங் டிப்ஸ் சொல்லுங்களேன்!

ஒவ்வொரு ப்ரீடுக்கும், குரூமிங் மெத்தட் மாறும். நிறைய பேர், ஹேர்ரி ப்ரீடு தான் விரும்புறாங்க. ஆனா, அதோட முடி சரியா பராமரிக்கலைன்னா, ஸ்கின் பிராப்ளம் வரும். கண்டுக்காம விட்டுட்டா, ஸ்மெல் வரும். ஸ்கின்னுக்கு வலிக்காத மாதிரியான பிரஷ் வச்சி, டெய்லி சீவி விடணும். கண்களை, 'வைப்ஸ்' வச்சி துடைக்கணும். வாரத்துக்கு ஒருமுறையாவது, சாப்ட் சோப்பு, ஷாம்பு அப்ளை பண்ணி குளிக்க வைக்கணும். காது, மூக்குல தண்ணீர் போகக்கூடாது.

கால்கள்ல இருக்க நகத்தை அடிக்கடி வெட்டி விடணும். இல்லாட்டி, ஆசையா அது தாவும் போது, ஓனரோட ஸ்கின் டேமேஜ் ஆகிடும். இது வெட்டி விடத் தெரியலைன்னா, ரிஸ்க் எடுக்கக்கூடாது. நகத்தை வெட்டுறேன்னு, நிறைய பேர் அதோட விரலையே வெட்டிட்டு, அப்புறம் உட்காந்து அழுவாங்க. இவ்வளவு விஷயங்கள் இருக்கா? ஆமாங்க. ஒரு குழந்தைய பராமரிப்பது மாதிரி தான் செல்லப்பிராணிகளை வளர்க்குறது.

இதெல்லாம் செய்ய முடியாதுன்னு நினைப்பவர்கள், பெட் லவ்வர்ரா இருக்கவே முடியாது. நம்ம ஸ்ட்ரஸ் பஸ்ட்டரான பெட்ஸ் மேல, அக்கறை, அன்பு, அரவணைப்பு காட்டலைன்னா எப்படி...!. செல்லப்பிராணிகளை வீட்டுல வைத்திருப்பவர்கள், லைப்போட ஒவ்வொரு நொடியையும், சந்தோஷமா பீல் பண்ணுவாங்க. அந்த பீலிங்கே வேற லெவல்!!!. புடிச்ச விஷயத்தை ரசிச்சு செய்றது இதுதான் போல!






      Dinamalar
      Follow us