ADDED : மார் 09, 2024 08:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடிக்கிற வெயிலுக்கு காலையிேலயே சோர்ந்து போய் படுத்துக்குற உங்க வீட்டு செல்லப்பிராணியை குஷிப்படுத்துறதுக்கு, நிறைய டாய்ஸ், பெட் ஷாப்ல கிடைக்குது.கூலிங் போன்: பிரிட்ஜ்ல வைத்து மதிய நேரத்துல, கூலிங் 'போன்' பொம்மைய கொடுத்தா, உங்க பெட் ஜாலியாக விளையாடும். இது பாக்குறதுக்கு எலும்பு மாதிரியே இருக்கறதால, கடிச்சு கடிச்சு குஷியாகிடும்.
கூலிங் ஸ்பான்ச்: ஆரஞ்ச், தர்பூசணி மாதிரி வடிவங்களில் இந்த ஸ்பான்ச் கடைகளில் கிடைக்குது. தண்ணீல நனைச்சு, இதை கொடுத்துட்டா ஹேப்பியா குதிச்சு விளையாடும்.கூலிங் பவுல்: இந்த பவுல்ல தண்ணீர் ஊற்றி, ப்ரீசர்ல வைச்சிட்டா, ஐஸ்கட்டியா மாறிடும். இதை, மதிய நேரத்துல செல்லப்பிராணியோட பக்கத்துல வைச்சிட்டா, ஐஸ்கட்டி கரையற வரைக்கும், சின்ராச கையிலயே புடிக்க முடியாது.

