
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெ யில் நேரத்தில் சாப்பிடாமல், அடம்பிடிக்கும் பப்பிக்கு, சில்லென்று ஒரு ஐஸ்கிரீமை, வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம்.
இதற்கு, உங்கள் பப்பிக்கு பிடித்த பழங்களில் உள்ள விதைகளை மட்டும் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனுடன், இனிப்பு இல்லாத பீனட் பட்டர் சிறிது சேர்த்து, மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். குச்சி ஐஸ் மோல்டில் இதை நிரப்பி, ஒரு ஐஸ் குச்சியை சொருகி, ப்ரீசரில் வைக்க வேண்டும். அடுத்த நாள் மதியம் எடுத்து கொடுத்தால், ரசித்து, ருசித்து சாப்பிடும். இதை கேரட், பீட்ரூட், புரோகோலி போன்ற காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். வாரத்தில் இரு நாட்கள் இதுபோன்ற வித்தியாசமான ரெசிபிக்களை செய்து கொடுத்து அசத்துங்க.