UPDATED : ஆக 31, 2024 10:58 AM
ADDED : ஆக 31, 2024 10:57 AM

புதிதாக பப்பி வாங்கியிருக்கிறேன். இதற்கு உணவு, பராமரிப்பு முறை பற்றி கூறுங்கள்.
- டி. செல்வி, கோவை.
புதிதாக பப்பி வளர்ப்போர், அதன் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலர், அதிக அளவு உணவு கொடுத்து, பப்பி வாங்கிய ஓரிரு நாட்களிலேயே, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக கூறி, சிகிச்சைக்கு வருவர். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை, உணவு கொடுத்தால் போதும். என்ன வகை ப்ரீட் என்பதை பொறுத்து, உணவின் அளவை கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம். சில வகை நாய்களுக்கு, பால் குடித்தால் அலர்ஜி ஏற்படும். இதற்கு பதிலாக தயிர் கொடுப்பது நல்லது.
முறையான கால இடைவெளியில் தடுப்பூசி போடுவது அவசியம். 3-6 மாத காலம் வரை, அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது, மற்ற தெருநாய்களுடன் பழகவிட கூடாது. காற்று மூலம், வைரஸ், பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், பப்பி பாதிக்கப்படும். மேலும், வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்பியதும், பப்பியின் காது, கழுத்து, வால் பின்புறம், பாதம் உள்ளிட்ட இடங்களை குரூமிங் செய்து, ஏதேனும் உண்ணி இருக்கிறதா என பரிசோதிப்பது நல்லது. உண்ணி தொற்றுக்கு, பிரத்யேக மாத்திரைகள் கிடைக்கின்றன. இருப்பினும், கால்நடை மருத்துவரின் பரிந்துரைப்படி, சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
- இ.ரினி ஐரின் சிந்தியா, கால்நடை மருத்துவர், மதுரை.